உங்களை கோபப்படுத்தும் குழந்தையின் 10 செயல்கள்

உங்கள் குழந்தை தான் உங்கள் வாழ்வின் பொக்கிஷமாகும். ஆனால், சில சமயங்களில், அவர்களின் சில செயல்கள் உங்களை கோபப்படுத்தும். குழந்தை வளர்ப்பில் இதையெல்லாம் கடந்து வந்து தான் ஆக வேண்டும் என்றாலும், அவர்களின் கெட்ட பழக்கங்களை கண்டித்தால் தான் வருங்காலத்தில் அவர்கள் ஒழுக்கமான பிள்ளையாக வளர்வார்கள். சரி, இப்போது நம்மை கோபப்படுத்தும் குழந்தையின் 10 செயல்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

1 உணவை எறிதல்

மற்ற பொருட்களை போல உணவையும் குழந்தைகள் தூக்கி எறிவார்கள். இது உங்களின் பொறுமையை மிகவும் சோதிக்கும் விஷயமாகும்.

2 பொருட்களை உடைத்தல்

உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான பொருள் அல்லது நீங்கள் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வந்த பொருளை உங்கள் குழந்தை உடைத்தால் எப்படி இருக்கும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

3 கிறுக்குதல்

குழந்தைகள் தங்கள் ஓவியத்திறனை எல்லாவற்றிலும் காட்டுவார்கள். வீட்டின் தரையிலிருந்து சுவர் வரை எல்லாவற்றிலும் கிறுக்கி வைப்பார்கள். எனவே, அவர்கள் வரைய ஒரு புத்தகம் வாங்கி கொடுப்பது சிறந்தது.

4 திரும்ப செய்தல்

உங்கள் குழந்தைக்கு பிடித்தமானதை நீங்கள் செய்தே தீர வேண்டும். அதை தான் குழந்தைகளும் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நீங்கள் அவர்களுக்கு ஏதாவது கதை கூறினால் மேலும் மேலும் அதிக கதை சொல்ல சொல்வார்கள் அல்லது சொன்ன கதையை திரும்ப திரும்ப சொல்ல சொல்வார்கள்.

5 அழுகை

குழந்தைகள் ஏதாவது கேட்டு நீங்கள் முடியாது என்று சொன்னால் போதும், உடனே வீறிட்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். இது உங்கள் பொறுமையை மிகவும் சோதிக்கும் செயலாகும்.

6 பிடிவாதம்

இது குழந்தைகள் உபயோகிக்கும் ஆயுதம். நீங்கள் அவர்கள் சொல்வதை கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பார்கள். குழந்தை வளர்ப்பில் இதையும் கடந்து வந்து தான் ஆக வேண்டும்.

7 வீட்டை அலங்கோலமாக்குதல்

இதில் குழந்தைகளுக்கு என்ன ஆனந்தம் கிடைக்கிறது என்று நமக்கு தெரியாது. வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் களைத்து போட்டு விளையாடுவார்கள். இதனால் வீட்டை மீண்டும் ஒழுங்குபடுத்தும் வேலை நமக்கு எரிச்சலூட்டும்.

8 மூக்கு நோண்டுதல்

இது சுகாதாரமற்ற செயல். இதை நீங்கள் கண்டித்தே தீர வேண்டும். இல்லையென்றால், அதே விரலை வாயில் வைப்பார்கள். இதனால் குழந்தைகளின் உடல்நலம் தான் குன்றும்.

9 சண்டையிடுதல்

ஒன்றுக்கு அதிகமான குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்குள் நடக்கும் சண்டையே நமக்கு பெரிய தலைவலியாக இருக்கும். அவர்களின் சண்டையை தீர்க்கவே முடியாது.

10 தெரியாமல் நம்மை காயப்படுத்துதல்

குழந்தைகள் சில நேரங்களில் பொருட்களை தூக்கி எரியும் போதோ அல்லது விளையாடும் போதோ தவறுதலாக நம்மை காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது.  

Leave a Reply

%d bloggers like this: