கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க உண்ண வேண்டிய உணவுகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உணவுகள் எடுத்து கொள்ள எந்த கட்டுப்பாடும் கிடையாது. அவர்களுக்கு பிடித்த அனைத்தையும் கொடுப்பார்கள். கருத்தரித்தபின் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க சில உணவுகளை தவிர்க்க சொல்லி இருப்பார்கள். அவை அனைத்தையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே போல் ஆரோக்கியத்தை தர கூடிய உணவுகளை அறிந்து உட்கொள்ளவும் துவங்கி இருப்பீர்கள். கருச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்க முதல் மூன்று மாதங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய உணவுகளை பற்றி தெரியுமா? இங்கு கருச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.  

1 புரதம் மற்றும் கால்சியம்

கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவ கூடியது. புரதம் குழந்தையின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் உண்ண வேண்டும்.

2 பசலை கீரை

இதில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இது தாயின் இரத்த உற்பத்தியை அதிகரித்து, சிசுவின் உடலிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

3 பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா 3, புரதம், அத்தியாவசிய தாதுக்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்திருக்கின்றன. இதில் இருக்கும் புரதம் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

4 தண்ணீர்விட்டான் கிழங்கு

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடால் மட்டும் உடலால் இயங்க முடியாது. எனவே அவற்றை உறுஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். இந்த தண்ணீர்விட்டான் கிழங்கில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. மேலும் இதை கர்ப்பிணிகள் சாப்பிடால், காலை நேர சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படாது.

5 வெண்டைக்காய்

இதன் வழவழப்பு தன்மையால் பெரும்பாலானவர்கள் தற்போது இதை தவிர்த்து வருகிறார்கள். இதில் போலிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்பகால நீரழிவு பிரச்சனையை தவிர்க்கிறது.

6 ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

வைட்டமின் சி அதிகம் இருப்பதால், தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் போலிக் அமிலம் பிரசவ கால சிக்கலை தவிர்க்கவும் உதவுகிறது.

எலுமிச்சையிலும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை சாறை ஒரு குவளை நீரில் தேனுடன் கலந்து குடித்தால், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி கட்டுப்படுத்தப்படும்.

7 ப்ரோகோலி

பொதுவாகவே ப்ரோக்கோலியில் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. இதை கர்ப்பிணிகள் உணவில் சேர்த்தால், இருப்பு சத்து அதிகரித்து தாயின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது.

8 முட்டை

முட்டையில் புரத சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. கர்ப்பிணிகள் உணவில் தினம் இரண்டு முட்டை எடுத்து கொள்வது தாய்க்கு மட்டுமின்றி குழந்தையின் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

9 சால்மன் மீன்

பொதுவாகவே மீனில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் மீன் சாப்பிடுவது சிறந்தது. அதிலும் சால்மன் என்னும் மீனில் மற்ற மீன்களை விட அதிக அளவில் இந்த சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

10 தயிர்

தயிரில் அதிக அளவில் கால்சியம் நிறைந்திருக்கிறது. தினமும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. இதை கர்ப்பிணிகள் உணவில் சேர்த்து கொண்டால், கர்ப்பகால நெஞ்செரிச்சலை தவிர்க்கவும், உடலை குளிர்ச்சியுடன் வைத்து கொள்ளவும் சாப்பிட வேண்டியது அவசியம்.

11 மாதுளை

பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த பழங்களில் ஒன்று மாதுளை. இதில் நார் சத்து, புரதம், வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் போலேட் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதை கர்ப்பிணிகள் தினமும் உணவில் சேர்த்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

12 மிளகு கீரை

 மிளகு கீரை பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால் வாந்தி தன்மை குறையும்.

13 வைட்டமின் பி6

வாழைப்பழம், மீன் மற்றும் சோளம் போன்றவற்றில் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை உணவில் சேர்த்து கொண்டால், கருச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்கும்.

Leave a Reply

%d bloggers like this: