கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு…

தலை முடியின் மீது ஆண் பெண் என இருபாலருக்குமே ஈர்ப்பு அதிகம். கூந்தல் பராமரிப்பிற்காக அவர்கள் எண்ணெய், ஷாம்பூ மற்றும் பலவகையான இரசாயன கலப்பை உபயோகிப்பார்கள். பெண்கள் அழகு நிலையங்களில் வண்ணப்பூச்சுகளை பூசி கொள்ளுதல் மற்றும் பல அழகு சாதன பொருட்களை உபயோகித்து அழகு படுத்தி கொள்வதால், விரைவிலேயே அவர்களது முடி உதிர துவங்கி விடுகிறது. இதனால் அவர்கள் மீண்டும் கூந்தல் பாராமரிப்பிற்கென பலவற்றை செய்ய துவங்கி விடுகிறார்கள். இயற்கையான வழிகளை பராமரித்தால், நிரந்திரமான தீர்வை பெறலாம். இங்கு இயற்கையான முறையில் எப்படி கூந்தலை பராமரிப்பது என்று பார்க்கலாம். 

வாழைப்பழம்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசினால், தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சீமைச்சாமந்தி டீ

மூன்று சீமைச்சாமந்தி டீ பையை சூடான நீரில் 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் டீ பையை எடுத்துவிட்டு, அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகரை சிறிது கலந்து, தலைமுடியை அலச, முடியின் பொலிவு மற்றும் மிருதுத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

முட்டை

இரண்டு முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அத்துடன் 5 முதல் 6 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, தலைமுடியில் தடவி துண்டை தலையில் சுற்றி 1 மணிநேரம் கழித்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள சருமத்துளைகள் திறக்கப்பட்டு, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைத்து, தலைமுடியின் வளர்ச்சி நன்கு அதிகரிக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்

தலைமுடி அதிகம் உதிர்வதைத் தடுக்க, நறுமணமிக்க எண்ணெய்களான அவகேடோ அல்லது ஜொஜோபா எண்ணெய்களை நேரடியாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் எந்த ஒரு நறுமணமிக்க எண்ணெயை பயன்படுத்தும் முன், சரியான நிபுணர்களிடம் கலந்தலோசித்துக் கொள்வது நல்லது.

ரோஸ்மேரி எண்ணெய்

இது தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வலிமையையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும். ஆப்பிள் சீடர் வினிகரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது ரோஸ்மேரி எண்ணெயையும் கலந்து ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி 2-3 நாட்கள் வைத்து, தலைக்கு ஷாம்பு போட்டு அலசியப் பின், இந்த கலவையால் தலைமுடியை அலசினால் முடியின் பொலிவும், மென்மையும் அதிகரிக்கும்.

Leave a Reply

%d bloggers like this: