கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்

பெண்களின் வாழ்கை முழுமையடைவது அவள் தாய் என்னும் ஸ்தானத்தை அடையும் போது தான். அவள் தாய்மை அடைய பத்து மாதம் கருவில் குழந்தையை சுமக்க வேண்டும். அது பெண்களுக்கு இன்ப அனுபவமாகவே இருக்கிறது. அதே சமயத்தில் அவர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமான ஒன்று.  

பெண்கள் எப்போதும் பொறுப்புடையவர்களாகவும், பொறுமை உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்களது கவனம் அவர்கள் கருவிலிருக்கும் சிசு மற்றும் குடும்பத்தின் மீதே இருக்கும். கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போற்றவற்றால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். கர்ப்பகால நீரழிவு நோய் அனைத்து பெண்களுக்கும் ஏற்பட கூடிய ஒன்று தான். இதே போன்று தான் இரத்த அழுத்தமும். இரத்த அழுத்தம் இருக்கும் பெண்களும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்கலாம். இது குறித்து கவலையடைய தேவையில்லை. ஆனால், இது சில பெண்களை மிகவும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தமாகவும் இருக்கலாம்.ஆனால், அவர்களின் சிறுநீரில் ப்ரோடீன் சக்தி இருக்காது. கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்களை கர்ப்பகாலத்தில் ஏற்படும் கர்ப்ப கால வலிப்பு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. சில பெண்களுக்கு 20 வாரங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. இதனை குரோனிக் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகிறார்கள். இந்த வகை இரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகும் தொடரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரசவத்திற்கு பிறகு சுமார் 12 வாரங்களுக்கு தொடரும். சில பெண்கள் கர்ப்பகால வலிப்பு நோய் அதிகரித்தல் மற்றும் குரோனிக் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இது உயர் இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான். அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் சில வாழ்கை மாற்றங்களை செய்து கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இரத்த அழுத்தம் இருந்தால், இலகுவான உடல் வேலைகளை செய்யலாம். காலை மாலை மென்மையான நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் தனது இரத்த அழுத்த அளவுகளை போதுமான இடைவெளிகளில் தொடர்ந்து பரிசோதித்து கொள்ளவேண்டும். உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கர்ப்பகால இரத்த அழுத்தத்தை எளிதாக கட்டுக்குள் வைக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இது எல்லா கர்ப்பிணிப்பெண்களும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று. அமைதியான மனம் எல்லா அழுத்தங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் உங்களை காக்கும். தியானம் செய்வதன் மூலமாக சிறந்த பலனை பெறலாம். தினமும் 15-20 நிமிடங்கள் தியானம் செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், பழங்கள் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்து கொள்வதன் மூலம் இதை கட்டுக்குள் வைக்க முடியும். இன்றைய காலத்தில் மருத்துவ உலகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இதற்கு பயன் தரும். இது குறைத்து கவலையடைய தேவையில்லை.

Leave a Reply

%d bloggers like this: