குழந்தைகளுக்கு ஏற்படும் விக்கலை நிறுத்த

புதிதாய் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு குழந்தை பராமரிப்பு என்பது முக்கிய வேலையாக இருக்கும். குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டுமென்று அறிந்திருப்பீர்கள். என்னதான் நீங்கள் அறிந்திருந்தாலும் குழந்தைக்கு விக்கல் வரும்போது, அம்மாக்கள் பயப்பட தொடங்கிவிடுவார்கள். நூலை சுருட்டி குழந்தை தலையில் வைத்தல் போன்றவற்றை செய்வார்கள். குழந்தையின் விக்கல் தானாக நிற்க வேண்டும் என காத்திருந்தால், குழந்தைகள் அழ துவங்கி விடுவார்கள். இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் விக்கலை நிறுத்துவதற்கான வழிகளை பார்க்கலாம்.  

1 குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது, அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

2 தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருக்க, பால் கொடுக்கும் போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காமல் இருப்பார்கள். எனவே விக்கலும் ஏற்படாமல் இருக்கும்.

3 தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் கண்டிப்பாக ஏப்பம் விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பால் குடிக்கும் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

4 குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு வாயுத்தொல்லை கூட காரணமாக இருக்கலாம். குழந்தைகள் வாயுத் தொல்லையினால் தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். எனவே அவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.

5 தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களின் உடல்நிலையை மோசமாகக்கிவிடும்.

6 குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படும் போது, தேன் இரப்பர்களை கொடுத்தும் அவர்களின் விக்கலை நிறுத்த முயற்சிக்கலாம்.

7 ஓமத்திரன் (gripe water) நீர் மற்றும் மூலிகைகளின் கலவையால் செய்யப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு குடல் அசௌகரியத்தை சரி செய்ய பயன்படுகிறது. நீங்கள் விக்கலை நிறுத்த சிறிய அளவில் இதை பயன்படுத்தலாம். இது 50 சதவீதம் மட்டுமே பயனளிக்கும், ஆனால் குழந்தைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Leave a Reply

%d bloggers like this: