குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க

குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருக்கும் போது படுக்கையில் சிறுநீர் கழித்தால், நாம் அவற்றை சுத்தம் செய்து விடுவோம். ஆனால், குழந்தைகள் வளர வளர படுக்கையில் சிறுநீர் கழிப்பது பெற்றோரை எரிச்சலடைய செய்யும். சில பெற்றோர் குழந்தைகளை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை எண்ணி கவலையடைவார்கள். சில பெற்றோர் கோபம் கொண்டு குழந்தைகளை அடிக்கவும், திட்டவும் செய்வார்கள். இதை தவிர்க்க சில பெற்றோர் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வாங்கி கொடுப்பார்கள். இது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்று என்பது முக்கியமான ஒன்று. இங்கு குழந்தைகள் ஏன் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள் மற்றும் அதை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். 

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் :

1 குழந்தைகள் பெரும்பாலும் ஆழ்த்த உறக்கத்தில் இருப்பதால், சிறுநீர்ப்பையிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் சமிக்கைகள் சரிவர சென்றடையாது. இதனாலேயே அதிக அளவிலான குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

2 குழந்தைகளுக்கு சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (ஆன்டிடையூரிடிக் ஹார்மோன்) உற்பத்தி இரவில் குறைவாக இருக்கும். இந்த ஹார்மோன் இரவில் சிறுநீர் உற்பத்தியை குறைக்க உதவ கூடியது. இதன் உற்பத்தி குறைவதால், குழந்தைகள் அவர்களின் கட்டுப்பாடில்லாமலே படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

3 குழந்தைகள் காலை முதல் இரவு வரை அதிக தண்ணீர் குடிக்கிறார்கள். இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் பெண் குழந்தைகளை ஒப்பிடும் போது, ஆண் குழந்தைகளின் சிறுநீர்ப்பை சிறியதாக இருக்கும். இதனால் ஆண் குழந்தைகளே படுக்கையில் அதிக அளவில் சிறுநீர் கழிக்கிறார்கள்.

4 குழந்தைகளுக்கு நீரழிவு, முதுகெலும்பு பிளவு மற்றும் சிறுநீர்ப்பை கட்டிகள் போன்ற மருத்துவ பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள்.

தடுக்கும் வழிகள் :

1 குழந்தைகள் உறங்கும் முன் கழிவறை அழைத்து செல்வதை பெற்றோர் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

2 இரவில் குழந்தைகள் கழிவறை செல்ல பழக்க படுத்த வேண்டும். சிறுநீர் கழிக்க செல்லும் முன் பெற்றோரை உடன் அழைத்து செல்ல வலியுறுத்த வேண்டும்.

3 இரவில் அதிக நீர் அருந்துவதை தவிர்த்திடுங்கள். அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் போது, உணவின் அளவு குறைந்திடும். இது இரவில் அவர்களை சிறுநீர் கழிக்க செய்வதோடு மட்டுமில்லாமல், ஊட்டச்சத்து பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.

4 படுக்கையை அலாரத்துடன் சேர்த்து இணைத்து வையுங்கள். இது உங்கள் குழந்தை சிறுநீர் கழிக்க துவங்கிய உடன் சப்தம் எழுப்ப துவக்கும். இதனால் குழந்தைகள் விழித்து கொள்வார்கள். நீங்கள் அவர்களை கழிவறை அழைத்து செல்லலாம்.

5 சில பெற்றோர் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க மாத்திரைகள் வாங்கி கொடுப்பார்கள். மாத்திரைகள் அதிக அளவில் சிறுநீரை சிறுநீர்ப்பையில் தக்க வைப்பதோடு, சிறுநீர் உற்பத்தியையும் குறைக்க துவங்கும். இது குழந்தைகளுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

Leave a Reply

%d bloggers like this: