குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவும் 7 உணவுகள்

குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பதை நினைத்து பெரும்பாலான பெற்றோர் கவலையடைகிறார்கள். என்னத்தான் உணவுகள் கொடுத்தாலும் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பது பெற்றோரின் கருத்து. பெற்றோர் அதெற்கென விளம்பரங்களில் வரும் உணவுகள் மற்றும் சத்து பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இவை குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்குமே தவிர பலன் தராது. இங்கு இயற்கையான முறையில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க செய்யும் உணவுகளை பார்க்கலாம். 

1 பால்

குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பாலில் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான அனைத்து சத்துக்களும் நிறைத்திருக்கு. குழந்தையோட வாழ்நாளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் இருக்கு. ஆறு மாதத்திற்கு பின் பாதி திரவ உணவு பொருள்களையே அல்லது திட உணவு பொருள்களையோ தாய்ப்பாலோடு சேர்த்து கொடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது நிரம்பியவுடன் மாட்டு பால் கொடுக்கலாம்.

2 வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பி6 போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இதை நீங்கள் 6 மாதத்திற்கு பிறகு குழந்தையின் உணவில் சேர்க்கலாம். வாழைப்பழத்தை மசித்தோ அல்லது வேறு வடிவிலோ குழந்தையின் உணவில் சேர்க்கலாம். தினம் ஒரு வாழைப்பழத்தை குழந்தையின் உணவில் சேர்ப்பது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கும்.

3 சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு மிகவும் சத்தான மற்றும் சுவை நிறைந்த உணவு. இதில் வைட்டமின் ஏ, சி, பி6, காப்பர், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிக அளவில் உள்ளன. இதை வேகவைத்து மசித்தோ நேரடியாகவோ அல்லது பாலில் கலந்தோ நேரடியாக குழந்தைக்கு கொடுக்கலாம். இது குழந்தைக்கு கொடுப்பதற்கேற்ற ஆரோக்கியமான மற்றும் சுவையான முதல் உணவாகும்.

4 கோழி இறைச்சி

கோழி இறைச்சியை குழந்தையின் 8 மாதங்களுக்கு பிறகே கொடுக்க வேண்டும். இது குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க கூடிய கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவாகும். நீங்கள் கோழி இறைச்சி சூப், கூழ் அல்லது வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாதத்துடன் சேர்த்தோ கொடுக்கலாம்.

5 நெய்

நெய் மற்றும் வெண்ணை போன்றவை குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க செய்யும் உணவுகளாகும். குழந்தையின் உணவில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கொடுக்கலாம். இது சில குழந்தைகளால் எளிதில் செரிக்க முடியாத ஒன்றாக இருப்பதால், குழந்தையின் உணவில் சிறிது சேர்த்து பார்த்து பின் கொடுப்பது சிறந்தது. வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யாக இருந்தால் மிகவும் நல்லது.

6 கேழ்வரகு

ஆரோக்கியமான முறையில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், புரதம், இரும்பு சத்து, நார் சத்து மற்றும் இதர தாதுக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. மேலும் இது விரைவில் செரித்து விட கூடியதாக இருப்பதால், குழந்தை உணவின் ஆரம்பத்திலேயே சேர்க்கலாம். உங்கள் குழந்தை சிறிது வளர்ந்ததும் கேழ்வரகு கஞ்சி, தோசை அல்லது இட்லி போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.

7 முட்டை

முட்டையின் மஞ்சள் கரு குழந்தைக்கு கொடுப்பதற்கு சிறந்த பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு. ஆனால் முட்டையின் வெள்ளை கரு குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால், குழந்தையின் ஒரு வயது வரை தவிர்ப்பது சிறந்தது. முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு விதவிதமாய் சமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை வலுப்படுத்த கூடிய சரியான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொடுக்க முடியும்.

Leave a Reply

%d bloggers like this: