தாய்ப்பாலூட்டும் தாய்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

உண்ணும் உணவிலிருந்து, குடிக்கும் தண்ணீர் வரை அனைத்திலும் கலப்படம் இருக்கும் உலகம். காற்று கூட மாசுபட்டிருக்கிறது. எந்த விதமான கலப்படமும், மாசுபடும் இல்லாத ஒன்று தாயால் குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த உடன் முதன் முதலில் கொடுக்கும் பால் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். பிரசவம் முடிந்த சில காலத்திற்கு மட்டுமே இந்த பால் சுரக்கும். இதில் கார்போஹைட்ரேட்டும், புரதமும் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது எளிதில் செரிக்கப்படுவதால், குழந்தைகள் சிரமமின்றி மலம் கழிப்பார்கள். குழந்தையின் இரைப்பை குடல் பாதையைச் சீராக்கி வயிற்றைப் பாதிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இரத்த வெள்ளை அணுக்களைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.  

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் ஆரோக்கியம் மட்டுமின்றி தாயின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படாது என்பது நாம் நன்றாக அறிந்த ஒன்று தான். தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

முதல் ஆறு மாதத்தில் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால் ஆரோக்கியத்துடன், குழந்தை குடிப்பதற்கு ஏற்ற தன்மையிலும் இருக்கும். இதனால் குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை நீர், பழச்சாறு மற்றும் செயற்கை உணவு போன்றவற்றை கொடுக்க தேவையில்லை. பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளை ஒப்பிடும் போது தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்பகாலத்திலிருந்து பிரசவம் வரை அதிகரித்த எடை குறையும். பால் கொடுக்கும் போது, தாயின் உடலிளிருந்து வெளிப்படும் ஹார்மோன் கர்ப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்துவதோடு, மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை அடிக்கடி ஏற்படாது. மேலும் ஆஸ்துமா, வீசிங், சரும நோய்கள் போன்றவை தாக்குவதற்கான வாய்ப்புகளும் குறைவு. நுண்ணறிவு அளவு மிக அதிகமாக இருக்கும்.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை 15 முதல் 20 நிமிடங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு நாளில் பல தடவை குழந்தை தாய்ப்பால் கொடுக்கலாம். பால் புகட்டும் போது குழந்தை உடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும். பயண நேரங்களில் சிரமம் இல்லாமல், பால் கொடுப்பதற்கு வசதியாக ஃபீடிங் ஏப்ரன், சால்வை, பிரத்யேக உடைகள் விற்கப்படுகின்றன.

தாய்மார்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் கூட பால் கொடுக்கலாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் குழந்தைக்கு கொடுக்கலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும், அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரையும் வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம்.

குழந்தைக்கு பால் கொடுப்பதால், தாயின் உடலில் நீர் சத்தின் அளவு குறையும். அதை சமநிலையில் வைக்க பழச்சாறுகள், பால் போன்ற திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் அரிசிக்கஞ்சி கொடுக்கலாம். சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் உள்ள புரதத்தின் ஒவ்வாமையால் வாந்தி வரும். அதற்கு மருத்துவ ஆலோசனையே சிறந்த தீர்வு. ஒரு வயது வரை குழந்தைகளுக்குக் கண்டிப்பாக உப்பு, சர்க்கரை கொடுக்கக் கூடாது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத் தரலாம். 

Leave a Reply

%d bloggers like this: