தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டிய தருணங்கள்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. தாய்ப்பாலிளிருந்து குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு எவ்வளவு இயற்கை அல்லது செயற்கை உணவுகளை கொடுத்தாலும் அது தாய்ப்பாலுக்கு ஈடாகாது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து உணவு பொருளிலும், ஏன் தண்ணீரில் கூட கலப்படம் இருக்கிறது. இயற்கை உணவுகள் என்றாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்டு விடுகின்றன. இப்போதும் கலப்படம் இல்லாத உணவு தாய்ப்பால் ஒன்று மட்டும் தான். ஆனால், தாய்ப்பாலையும் குழந்தைக்கு கொடுக்காமல் தடுக்க வேண்டிய சில தருணங்கள் இருக்கின்றன. இங்கு அத்தகைய தருணங்களை பற்றி பார்க்கலாம்.  

1 மருந்துகள் உட்கொள்ளும் போது

நீங்கள் கீழ்கண்டவற்றிற்கு மருந்துகளை எடுத்துக் கொண்டால், குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும்.

1 ஆன்டி ரெட்ரோ வைரல் மருந்து (ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் மருத்துவ சிகிச்சை)

2 மனஅழுத்த மருந்துகள்

3 ஈஸ்ட்ரோஜென் நிறைந்திருக்கும் பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகள்

4 புற்றுநோய் மருந்துகள்

5 சட்டவிரோத மருந்துகள்

6 ஒற்றை தலைவலிக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், எர்கோட் ஆல்கலாய்டுகள் போன்றவை

7 மனநிலை நிலைப்படுத்திகள், லித்தியம் மற்றும் லாமோட்ரிஜின் போன்றவை

8 தூக்க மாத்திரைகள்

மேலே கொடுக்கப்பட்டவை வழிகாட்டுதல் மட்டுமே. நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்து கொண்டாலும் மருத்துவ ஆலோசனை பெற்று பின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது சிறந்தது.

2 மருத்துவ நிலை

தாய்ப்பால் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் சில தருணங்களும் இருக்க தான் செய்கிறது. குழந்தையின் தாய் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அது தாய்ப்பால் மூலம் குழந்தையை சென்றடைய வாய்ப்புள்ளதால் தவிர்க்க வேண்டும்.

1 ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருக்கும் போது

2 மனித டி-செல் லிம்போட்ரோபிக் வைரஸ் வகை I அல்லது வகை II உடன்

3 சிகிச்சையளிக்கப்படாத, தீவிரமான காசநோய்

3 குழந்தையின் ஆரோக்கியம்

உங்கள் அல்லது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கீழ்கண்ட அறிகுறிகளை கண்டால், தாய்ப்பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் : குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சில உணவு அட்டவணை உணவுகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.

தைராய்டு நிலை அல்லது குடல் நோய் : நீங்கள் எடுத்து கொள்ளும் கலோரியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். உங்கள் உடல் எடை குறைந்து விடாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

மார்பக அறுவை சிகிச்சை : ஏதேனும் மார்பக அறுவை செய்யப்பட்டிருந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.

தவறான பொருள் : உங்களது தாய்ப்பாலில் ஏதேனும் தவறான பொருள் கலந்திருப்பதாக மருத்துவர் தாய்ப்பாலூட்டுவதை தவிர்க்க பரிந்துரைத்தால்.

இந்த நிலைகளில் நீங்கள் தற்காலிகமாகவே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் குழந்தை தாய்ப்பாலூட்ட கூடாது என்பது இதன் அர்த்தமாகாது. மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவது சிறந்தது.

Leave a Reply

%d bloggers like this: