தாய்ப்பால் புகட்டுவது குறித்து பொதுவாக கேட்கப்படும் 10 கேள்விகள்

பொதுவாக ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோஷப்படுவார்கள். அந்த தாயும் சந்தோசப்படுவாள் என்றாலும் புதிதாக தாயான அவளுக்குள் பல விதமான கேள்விகளும் சந்தேகங்களும் எழும். குறிப்பாக தாய்ப்பால் புகட்டுவது குறித்து நிறைய சந்தேகங்கள் எழும். சில சந்தேகங்களை கேட்க மிகவும் தயங்குவார்கள். இங்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து பெண்கள் பொதுவாக கேட்க சில கேள்விகளை பார்ப்போம்.

1 சிசேரியன் செய்த பிறகு சுகப்பிரசவம் ஆன பெண்ணை போல் சாதாரணமாக தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

முடியும் என்பதே இதற்கான பதில். சிசேரியன் ஆன பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில மணி நேரங்கள் மயக்க நிலையில் இருப்பதால் தாய்ப்பால் சுரக்காது. இதற்கு, மருத்துவர்கள் ” உறிஞ்சுதல் (Suction) ‘’ முறையை அறிவுறுத்துவார்கள். இதனால் சாதாரணமாக தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும்.

2 பிரசவத்திற்கு பிறகு எப்போது தாய்ப்பால் கொடுக்கலாம்?

உங்கள் குழந்தையை சுத்தப்படுத்தி உங்கள் கையில் கொடுத்த உடனே தாய்ப்பால் கொடுக்கலாம். முதலில் வரும் சீம்பாலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால் மறக்காமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும்.

3 குழந்தைக்கு போதுமான அளவு பால் என்னிடம் இருக்குமா?

நீங்கள் சத்தான உணவுகள் காய்கறிகள் சாப்பிட்டால் உங்களுக்கு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு இருக்கும். இல்லையெனில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை நீங்கள் சாப்பிடலாம். ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

4 தாய்ப்பால் கொடுக்கும் போது நொறுக்கு தீனிகள், துரித உணவுகளை சாப்பிடலாமா?

இந்த உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் ஏதும் இருக்காது என்பதால் இதை உண்பதால் எந்த பயனும் இல்லை. சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

5 தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடுதல் வைட்டமின்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்தாலொழிய கூடுதலாக நீங்கள் ஏதும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

6 எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பசிக்கும். அதனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 20 நிமிடங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்.

7 உங்கள் மார்பு அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பிற்கும் சம்மந்தம் உள்ளதா?

இல்லை என்பதே இதற்கான விடையாகும். தாய்ப்பால் சுரப்பிற்கும் மார்பின் அளவிற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.

8 தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை சரியான நிலையில் வைத்திருக்கிறோமா என்று எப்படி அறிவது?

தாய்ப்பால் கொடுக்கும் போது உடலை விட குழந்தையின் தலை சற்று உயரமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், போக போக இது பழகி விடும்.

9 மாத்திரை எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

சக்கரை வியாதிக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவராக இருந்தாலோ அல்லது வேறு ஏதாவதற்கு மாத்திரை எடுத்துக்கொள்பவராக இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

10 தாய்ப்பாலுடன் வேறு உணவுகள் குழந்தைக்கு கொடுக்கலாமா? 

கூடவே கூடாது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே ஜீரணமாகக்கூடிய பொருள். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 

Leave a Reply

%d bloggers like this: