திருமண வாழ்வில் நியாயமாக சண்டை போட 9 வழிகள்

எந்த ஒரு திருமண வாழ்விலும் சிறிது கருத்து வேறுபாடும் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் வந்த பின்பு, தம்பதியர்கள் மனஅழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் தங்களையும் அறியாமல் மற்றவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை கவனித்து கொண்டு இருப்பார்கள். ஏனெனில் அப்போது தான் அவர்களை சுட்டிக்காட்ட இயலும். ஆனால், இதில் சில விதிமுறைகளை அமைத்து நியமாக சண்டையிடுவது தம்பதியரின் கடமை ஆகும். 

முடிவில், என்ன நடந்தாலும், நீங்கள் உங்கள் துணையை எவ்வளவு விரும்புகிறீர்கள் என்றும், உங்கள் உறவை பலமாக்க எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்றும் மறக்காதீர்கள். வெவ்வேறு விஷயங்களை பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்து கொண்டுள்ளதால் எந்நேரமும் சண்டை வருகிறது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கம் உள்ளது. அதுவே கருத்து வேறுபாடுகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. இதோ திருமண வாழ்வில் சரியாக சண்டையிட 9 வழிகள்:

1 நேர் வழி

 பழிக்கு பழி என்பது பிரச்சனையை அதிகரிக்கும் ஒரு வழியாகும். மேலும் பிரச்சனையை அதிகரித்தால் அது உங்கள் திருமண வாழ்க்கையை அழித்து விடும். அதுமட்டுமல்லாது எதிர்மறை எண்ணம், துணையை தவிர்த்தல் ஆகியவை நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்களாகும்.

2 உரிமை

உங்கள் துணையின் மீது பழியை போடுவதற்கு பதில், உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த துவங்குங்கள். “நீங்கள் எனக்கு உதவியது இல்லை, அதனால் இப்போது குழந்தையை கவனித்து கொள்ளுங்கள்” என்று கூறுவதை விட , “எனக்கு குழந்தைகள் விஷயத்தில் சில உதவி வேண்டும், ஏன்னெனில் நான் சோர்வாக உள்ளேன்” என்ற வாக்கியம் நன்றாக இருக்கும்.

3 வருங்காலத்தை திட்டமிடுங்கள்

குறுகிய கால திட்டங்களை தவிர்த்து நீண்ட கால இலக்குகளை பாருங்கள். சிலநேரங்களில், திட்டமிட்டபடி செயல்கள் நடக்காமல் போக வாய்ப்பு உண்டு. அதனால் முரண்பாடுகள் வந்து மோதலுக்கு வழிவகுக்கிறது. கூட்டாக சேர்ந்து செய்யும் விஷயத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி போட விரும்புவார்கள். திட்டமிடுதல் தம்பதியர்கள் இடையே வரும் பிரச்சனைகள் சமாளிக்கவும் உதவுகிறது.

4 கடந்தகாலம் குறித்து விவாதிப்பதை தவிர்க்கவும்

நீங்கள் உங்கள் துணையிடம் சண்டையிடும் பொழுது, எல்லா உண்மைகளும் தற்போதைய சூழ்நிலையை பற்றியே இருக்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி விவாதிக்கக்கூடாது. உங்கள் துணையிடம் கடந்தகாலம் பற்றி கூறுதல் அவரை மேலும் கோபமடைய வைக்கும்.

5 அன்பாக சொல்லுங்கள்

அன்புள்ளமே கருத்து வேறுபடுதலின் போது உங்களுக்கு உதவ கூடிய மிகப்பெரிய வழியாகும். உங்கள் விவாதத்தை நேர்மறையற்ற வழிகளிலும் முடிக்கலாம் அல்லது அன்பாகவும் மரியாதையாகவும் முடிவுக்கு கொண்டுவராலம். தேர்வு உங்களுடையது.

6 மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது. ஆதலால் விட்டு கொடுத்து செல்லவும். தோல்வி என்பது அவமானம் அல்ல. எனவே மாற்றத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். பேருக்கு வாதம் செய்வது வீண், அதுமட்டுமல்லாது அது இருவரிடமும் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கும்.

7 குழந்தைகள்

எப்பொழுதும் உங்கள் குழந்தைகளை உங்கள் சண்டைகளில் பயன்படுத்தாதீர்கள். அவர்கள் உங்கள் குழந்தை மட்டுமல்ல உங்கள் துணையின் குழந்தையும் கூட என்பதை மறந்து விடாதீர்கள். உங்களால் அமைதியாக சண்டையிட முடியாது என்றால், உங்கள் குழந்தைகள் முன்பு சண்டையிடாதீர்கள். குழந்தை உங்கள் சண்டையை பார்க்க நேர்ந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, விஷயங்களை சரி செய்ய நீங்களும் உங்கள் துணையும் முயற்சிப்பதாக சொல்லுங்கள்.

8 விதிகளை பின்பற்றுங்கள்

வீட்டு விதிகளை அமைப்பது மட்டும் போதாது. நீங்கள் அதை பின்பற்றவும் வேண்டும்.

9 நீங்கள் ஏன் திருமண செய்து கொண்டீர்கள் என்று நினைவு கொள்ளுங்கள்

ஏன் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சண்டைகள் உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் துணையை எவ்வளவு விரும்புகிறீர்கள் என்றும், அவர்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என்றும் அவ்வப்போது கூற வேண்டி வரும். எல்லாத்திருக்கும் மேல் காதலை எக்காலத்திலும் கைவிட்டுவிடாதீர்கள்.

Leave a Reply

%d bloggers like this: