நீங்கள் சித்தியாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய 9 விஷயங்கள்

தாய்மை, தாய்மார்கள் பற்றி பல விஷயங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று குடும்பத்தின் ஒரு முக்கியமான நபர் யாரென்றால் அது ” சித்தி “. குழந்தைகள் உலகம் ஒரு தனியுலகம். ஒரு குழந்தை ஒரு மனிதருக்குள் இருக்கும் பல உணர்வுகளை வெளியே கொண்டு வரும். அதே போல் தான் சித்திகளும். இங்கே சித்தியாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய சில விஷயங்களை பார்ப்போம். 

1 ஆட்டம் பாட்டம்

உங்கள் சகோதரி அவர் குழந்தையை உங்கள் கையில் கொடுக்கும் போது உங்களுக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. அந்த தருணத்தை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவீர்கள்.

2 புத்தகங்கள் படிப்பது

உங்கள் சகோதரியின் குழந்தையை வரவேற்க அனைத்து வகையிலும் தயாராகி விடுவீர்கள். அதற்கு சம்பந்தமான புத்தகங்களை படிப்பீர்கள். உங்கள் சகோதரியை விட உங்களுக்கு குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும்.

3 பெயர்

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அனைவரையும் விட நீங்கள் அதிகமாக யோசிப்பீர்கள். சொல்லப்போனால், அனைவருக்கும் முன் குழந்தைக்கு பெயர் தேட ஆரம்பித்து விடுவீர்கள். எவ்வளவு பெயர் தேடினாலும், அது எதுவும் உங்கள் சகோதரியின் குழந்தைக்கு போதுமானதாக தோன்றாது. ஆனாலும் நீங்கள் விடா முயற்சியோடு தேடி கண்டுபிடித்து இறுதியில் ஒரு பெயரை தேர்வு செய்வீர்கள்.

4 உணர்ச்சிவசப்படுதல்

உங்கள் சகோதரியின் குழந்தையை நீங்கள் கையில் வாங்கிக்கொள்ளும் நேரத்தில் ஏற்படும் உணர்வு அலாதியானது. அந்த சிறு வாண்டுவின் முகத்தை பார்க்கும் போது உங்களை அறியாமலேயே உணர்ச்சிவசப்படுவீர்கள். அது மிகவும் அழகான தருணம்.

5 குழந்தையின் வளர்ச்சி

நீங்கள் ஒவ்வொரு முறை குழந்தையை பார்க்கும் போது அவர் வளர்ந்து கொண்டே இருப்பார். நேற்று உங்கள் கையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தை இன்று தவழ ஆரம்பித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் அவரின் சேட்டைகளும் அதிகமாகிருக்கும்.

6 பள்ளிக்கு அனுப்புதல்

சித்தியாக இருப்பதில் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் குழந்தைகளுக்கு நன்றாக செல்லம் கொடுக்கலாம். இதனால் நீங்கள் தான் அவருக்கு பிடித்தமானவராக இருபீர்கள். அதனால் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் அவருக்கு செல்லம் கொடுக்கலாம்.

7 சித்தி என்று அழைத்தல்

குழந்தையின் வாயில் இருந்து சித்தி என்ற வார்த்தையை வரவழைப்பதற்குள், உங்களுக்கு போதும் போதும் என்றே ஆகி விடும். ஆனால் அதற்காக முயற்சித்து கொண்டே இருப்பீர்கள்.

8 சகோதர பாசம்

உங்க சகோதரியின் குழந்தை உங்களுக்கும் உங்கள் சகோதரிக்குமான உறவை இன்னும் பலப்படுத்தும். நீங்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கவனிக்கும்போது உங்களுக்குள் இருக்கும் பிணைப்பு அதிகமாகும். அதுமட்டுமல்லாது ஒரு தாயாக இருக்கும் உங்கள் சகோதரியின் மேல் உள்ள மதிப்பு அதிகரிக்கும்.

9 மனதளவில் ஏற்படும் மாற்றம்

உங்கள் சகோதரியின் குழந்தையை கவனிக்க கவனிக்க உங்களுக்கே தெரியாமல் தாய்மைக்கான உள்ளுணர்வு ஏற்பட துவங்கும். குழந்தைகள் தொந்தரவு கொடுப்பவர்கள் இல்லை என்று தோன்றும். உங்கள் சகோதரியின் குழந்தை மேல் அளவுகடந்த பாசத்தை பொழிவீர்கள். உங்களுக்கும் இதே போல் ஒரு குழந்தை வேண்டும் என்று ஏங்குவீர்கள்.

Leave a Reply

%d bloggers like this: