பள்ளிக்கு செல்ல குழந்தையை தயார் படுத்த உதவும் 9 வழிகள்

புதிதாக பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கஷ்டமான விஷயமாகும். நிறைய குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது தங்கள் பெற்றோரிகளிடம் இருந்து முதல் முறையாக நீண்ட நேரம் தள்ளி இருப்பார்கள். அதுமட்டுமல்லாது பள்ளியில் சுற்றிலும் அந்நியர்கள் உடன் இருப்பார்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை கையாள உங்கள் குழந்தையை மனதளவில் பள்ளிக்கு தாயார் படுத்துவது மிக முக்கியமானது. 

பள்ளி என்பது விதிகள், நேரம் மற்றும் நடைமுறைகள் உள்ள இடம். இவையெல்லாம் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவை. பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்கார வேண்டி வரும். இதையெல்லாம் குழந்தைக்கு பரிச்சயப்பட சில காலம் ஆகும் எனினும், நீங்கள் முன்னதாகவே அவர்களை தயார் படுத்த சில வழிமுறைகளை பார்ப்போம்.

1 உங்கள் மகன் / மகளுக்கு இன்று முதல் புதிய அட்டவணை ஆரம்பிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அவர்கள் நேரத்துக்கு எழுந்து / உறங்க வேண்டும் என்றும், தினமும் சில மணிநேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் .

2 பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் ஆசிரியரை பார்க்கவும்.

3 பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.

4 முடிந்தால், உங்கள் குழந்தையை சக வகுப்பு மாணவன் / மாணவியுடன் சந்திக்க வையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு பள்ளி துவங்கும் பொழுது ஒரு தோழன் அல்லது தோழி கிடைத்திருப்பர்.

5 உங்கள் குழந்தை இதற்கு முன் பால்வாடி பள்ளியில் படித்திருந்தால், தங்கள் பெற்றோரிடம் இருந்து அதிக நேரம் தள்ளி இருப்பது அவர்களுக்கு கடினமாக இருக்காது.

6 பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் – சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.

7 உங்கள் குழந்தையை சுயமாக நடந்துகொள்ள ஊக்குவியுங்கள், அதனால் அவர்களுக்கு பள்ளியில் உதவி தேவைப்படாது. உதாரணத்திற்கு, உதவியின்றி கழிப்பறையை உபயோகிக்க கற்றுக்கொடுத்தல், பாட்டில் இருந்து தண்ணீர் குடிக்க கற்றுக்கொடுத்தல் மற்றும் தங்கள் உடைமைகளை பாதுகாக்க கற்றுக்கொடுத்தல்.

8 யாரவது அவர்களின் பெயரை அழைக்கும் போது எவ்வாறு புரிந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். ஆசிரியரிடமும் மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றுகொடுங்கள்.

9 கடைசியாக, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிங்கள். அவர்களுக்கு அது மோசமாக நாளாக இருந்தாலும், அடுத்த நாள் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்துங்கள். பள்ளிக்கு செல்வது மிகவும் அவசியமான ஒன்று என்று எடுத்து சொல்லுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: