பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பாதிப்பிற்கான காரணங்களும் தீர்வும்

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பெரும்பாலான நோய் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். பெண்களை தாக்கும் நோய்களில் ஒன்று தைராய்டு. எப்போதும் இருக்கும் தூக்க உணர்வு, அடிக்கடி ஏற்படும் மறதி, குறைவாக சாப்பிட்டும் உடல் எடை ஏறுதல், அதிக சோர்வு, சிறிய காரணங்களுக்கு ஏற்படும் பதற்றம், எரிச்சல், அவர்கள் மீதே வெறுப்பு ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் . தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இதன் மூலம் அடுத்து ஏற்படவிருக்கும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். இங்கு தைராய்டு ஏற்படுவதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.

தைராய்டு சுரப்பி

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இங்கு சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் குறைபாடு ஏற்பட்டால் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தைராய்டு குறைவு

தைராய்டு குறைவாக இருக்கும் போது சரும வறட்சி, உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நேரத்திலும் குளிராக உணர்வது, ஒழுங்கற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் போன்றவை ஏற்படும். இவை தான் தைராய்டு குறைபாட்டிற்கான காரணமாகும்.

தைராய்ட் இருப்பவர்கள் முக்கியமாக உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். தைராய்டு குறைவாக இருப்பவர்கள் அயோடின்,. கடல் உப்பு போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால் அயோடின் இழப்பை சரி செய்யலாம்.

தைராய்டு அதிகரிப்பு

தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதோடு எச்சில் விழுங்குவதிலும் சிரமம் ஏற்படும். உடல் எடை குறைதல், சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆரம்ப காலத்திலேயே மருத்துவரின் ஆலோசனை படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.

தைராய்டு அதிகம் இருப்பவர்கள் பதப்படுத் தப்பட்ட உணவுகள், உடனடியாக தயாரிக்க கடைகளில் கிடைக்கும் உணவுகள், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மன நோய்

தைராய்டு பாதிப்பு இருந்தால் குழப்பம், மறதி, மன அழுத்தம், மற்றும் பல்வித மன நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தைராய்டு ஹார்மோன் சம நிலையற்று இருப்பதாம் உண்டாகும் பக்கவிளைவுகளாகும். 

தீர்வு

தைராய்டு அதிகமாக இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

Leave a Reply

%d bloggers like this: