குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது என்று பல நேரங்களில் தாய்மார்கள் குழம்பி போவார்கள். ஒரு 9 மாத குழந்தை அனைத்து உணவு வகைகளையும் சாப்பிட முடியாது. குழந்தைக்கு கொடுக்கப்படும் உணவு சுவையாகவும் அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். இங்கு ஒரு 9 மாத குழந்தைக்கு கொடுக்க கூடிய சில உணவு வகைகளை பார்ப்போம்.
1 பருப்பு மற்றும் சாதம்
இந்த உணவில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமல்லாது இது 9 மாத குழந்தைக்கான ஒரு சிறந்த உணவு.
தேவையான பொருட்கள் :
பருப்பு – 1/2 கப்
அரிசி – 1/2 கப்
காய்கறிகள் – கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம்
எண்ணெய் / வெண்ணெய்
தண்ணீர்
செய்முறை :
முதலில் காய்கறிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின்பு பருப்பு, அரிசி மற்றும் நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவையுங்கள்.
2-3 விசில் விட்டு இறக்கி விடுங்கள். பின்பு சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் குக்கரில் உள்ளதை மாற்றுங்கள்.
அதில் சிறுது வெண்ணெய் சேர்த்து கலந்து, நன்றாக மசித்து குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
2 கோழி இறைச்சி
தேவையான பொருட்கள் :
கோழி இறைச்சி
காய்கறிகள் – வெங்காயம் , தக்காளி, பூண்டு, கேரட்
ஆலிவ் எண்ணெய்
செய்முறை :
கோழி இறைச்சி மற்றும் காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கோழி இறைச்சியை சேர்த்து 7-8 நிமிடங்கள் வரை வேக வைத்து தனியே எடுத்து வையுங்கள்.
மீண்டும் வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்கறிகளை சமையுங்கள்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் கோழி இறைச்சியை சேர்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
இந்த கலவை ஆறிய பிறகு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுங்கள்.
3 முட்டை மஞ்சள் கரு பொடிமாஸ்
முட்டையில் விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஆகியவை ஏராளமாக உள்ளன.
தேவையான பொருட்கள் :
முட்டையின் மஞ்சள்கரு – 2
காய்கறிகள் – வெங்காயம் , தக்காளி, கேரட்
எண்ணெய் / வெண்ணெய்
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள்கரு இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.
மேற்சொன்ன காய்கறிகள் அனைத்தையும் நன்றாக நறுக்கி முட்டையுடன் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், கலவையை அதில் ஊற்றி 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
உங்கள் குழந்தைக்கு கொடுக்க முட்டை தயார்.
4 முட்டை மசியல்
தேவையான பொருட்கள் :
முட்டை
சக்கரைவள்ளி கிழங்கு ( வேகவைத்து மசித்த )
பால்
செய்முறை :
முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதிலிருக்கும் வெள்ளை கருவை ஒதுக்கிவிட்டு மஞ்சள்கருவை மட்டும் எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்.
அதில் மசித்த சக்கரைவள்ளி கிழங்கை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் சிறிது பால் சேர்த்து போல் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
5 வாழைப்பழம்
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 1-2 தேக்கரண்டி
மசித்த வாழைப்பழம்
தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் – 150மிலி
செய்முறை :
பால் மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
கலவை கெட்டியானதும் இறக்கி விடுங்கள்.
அந்த கலவை ஆறிய பின் மசித்த வாழைப்பழத்தை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.
கட்டி உருவாகாமல் இருக்க கலவையை நன்கு கலந்து கொண்டே இருங்கள்.
6 பாலாடை கட்டி (சீஸ்)
இந்த உணவில் ஜிங்க், வைட்டமின், போலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள் :
பாலாடை கட்டி (சீஸ்) – 45கிராம்
பட்டாணி – 45கிராம்
செய்முறை :
பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வேக வைத்து, பாலாடை கட்டியுடன் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்.
இதை சாதத்துடன் நன்கு மசித்து கொடுக்கலாம்.
7 மூன்று ஊட்டச்சத்துள்ள உணவு
இந்த உணவில் வைட்டமின் மற்றும் கால்சியம் அதிக அளவில் உள்ளன.
தேவையான பொருட்கள் :
ப்ரோக்கோலி
நன்றாக வறுத்து அரைக்கப்பட்ட பாதாம்
தக்காளி
செய்முறை :
ப்ரோக்கோலியை நன்றாக வேக வைத்து, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன் பாதம் தூளை சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.