கர்ப்பகாலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தை தடுக்க 4 வழிகள்..!

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில், மனதில் என பலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன; பெண்களின் உட்புறத்தில் ஏற்படும் இம்மாற்றங்களுடன்வெளிப்புற உடலிலும், வயிற்றின் வடிவம் என பல மாற்றங்கள் நிகழ்கிறது மற்றும் பெண்களின் உடல் நிறமும் மாற்றமடைகிறது. இந்த நிறமாற்றத்தை சரிசெய்யும் குறிப்புகள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம், வாருங்கள் கர்ப்பிணிகளே! 

1. உருளைக்கிழங்கு..

உருளைக்கிழங்கினை அறுத்து, முகத்திலும் தோலிலும் தடவினால், தழும்புகளையும் நிறமாற்றத்தையும் சரி செய்யலாம்; உருளை சாறினைக் கூட பயன்படுத்தலாம். இது நல்ல, எதிர்பார்த்த, அதிகப்படியான மாற்றத்தை விளைவிக்கும்.

2. தக்காளி..

தக்காளியை அறுத்தோ அல்லது முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், அது இழந்த முகப்பொலிவினையும் நிறத்தையும் அள்ளித்தரும்.

3. கற்றாழை..!

முகம் மற்றும் உடலில் ஏற்படும் தழும்புகளை மறையச் செய்ய, நிறத்தை அதிகரிக்க, உடலிற்கு பொலிவு தர கற்றாழை சிறந்த மருந்து பொருளாகும்.

4. எலுமிச்சை..!

எலுமிச்சை அல்லது அதன் சாறினை நிறத்தை அதிகரிக்க பயன்படுத்தலாம்; மேலும் இது முகத்திற்கு நல்லதொரு பொலிவினை அளிக்கிறது.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் இக்குறைகளை போக்க மேற்கூறிய எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்..!

Leave a Reply

%d bloggers like this: