குழந்தைகளுக்கு potty பயிற்சி அளிக்க 9 வழிகள்..!

குழந்தைகள் பிறந்த புதிதில் அவர்கள் செய்யும் செயல்களை முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள்; வளர வளரவே அவர்களுக்கு பெற்றோர் கூறும் விஷயங்கள் மூலம், குழந்தைகள் புது விஷயங்களை கிரகித்து கற்றுக் கொள்ள ஆரம்பிப்பர். அப்படி அவர்கள் அறியாத விஷயமே மலம் கழித்தல். குழந்தைக்கு உணவு கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களை மலம் கழிக்க வைப்பதும் அவசியம். குழந்தைகளை மலம் கழிக்க வைக்க பழக்குவதற்கு உதவும் முறைகளை பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்..  

1. உறுதி..

குழந்தைக்கு மலம் வருகிறதா இல்லையா என்று உறுதி செய்த பின்னர்; அவர்களை மலம் கழிக்க உட்கார வைக்கவும்; அதை விடுத்து வராத மலத்தை வா வா என்று வற்புறுத்தாதீர்.

2. potty

குழந்தைகள் மலம் கழிக்கும் potty எனும் நாற்காலி போன்ற பொருளை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளவும். ஏனெனில் குழந்தைகளால் பெரியவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பயன்படுத்த இயலாது.

3. ஆதரவு..

குழந்தை சொகுசாக உணரும் வகையில், குழந்தை இருக்கும் இடத்திலேயே மலம் கழிக்க உதவுமாறு வழிவகை செய்யவும்..

4. புத்தகம்..

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் potty யை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்களை எல்லாம் புத்தகத்தில் படித்து அறிய முயலுங்கள்.

5. நேரம்..

குழந்தைக்கு மலம் வந்ததும் அவசரப்படாமல், மற்றவரை அவசரப்படுத்தாமல் பொறுமையாக செயல்படுங்கள்; குழந்தை முழுதாக மலம் கழிக்கும் வரை காத்திருக்கவும்.

6. கழிவறை..

மெதுவாக குழந்தையை மலம் கழிக்க, கழிவறையினை பயன்படுத்த வேண்டும் என்ற பழக்கத்தை போதித்து, அதனை பழக்கப்படுத்த முயலுங்கள்..

7. ஆடைகள்..

நாட்கள் செல்ல செல்ல குழந்தை மலம் கழிக்கும் நேரத்தை நீங்களே கணிக்க முடியும் அந்த நேரங்களில், இலகுவான ஆடைகளை அணிவிக்கவும்.

8. சுத்தம்..

சில குழந்தைகள் மலம் கழித்து விட்டு அதில் கையை வைத்து விளையாடுவர்; இதனை பெற்றோர் கண்டித்து, சுத்தமான பழக்க வழக்கத்தை குழந்தைக்கு எடுத்துரைக்க வேண்டும்.

9. ஊக்கம்..

குழந்தைக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புதிதாக இருக்கும், இந்நிலையில் குழந்தையினை செய்யும் செயல்களை தைரியமாக செய்ய ஊக்குவிக்க வேண்டும்..

Leave a Reply

%d bloggers like this: