கூந்தலை பலப்படுத்த உதவும் 5 வீட்டுக் குறிப்புகள்..!

பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளுள் ஒன்று, கூந்தல் உதிர்வு. அந்த கூந்தல் உதிர்வை போக்கி, கூந்தலை பலப்படுத்தும் சில இயற்கை முறை, வீட்டிலேயே தயாரிக்கும் வகையில் அமையும் கூந்தலை வளர்ச்சியடைய செய்யும் குறிப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்..!  

1. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்!

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் 1/2 கப், ஆப்பிள் சீடர் வினிகர் 1/4 கப், தேன் 1/2 கப்

செய்முறை:

தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, தேன் மற்றும் வினிகரை அதனுடன் சேர்க்க வேண்டும். இதை தலைமுடியில் தடவி வந்தால், கூந்தல் உதிர்வு நின்று வளரத் தொடங்கும்.

2. தேங்காய் பால்..

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் 2 தேக்கரண்டி, லாவெண்டர் எண்ணெய் 2 சொட்டுக்கள்.

செய்முறை:

தேங்காய் பால் மற்றும் லாவெண்டர் எண்ணெய் இரண்டையும் கலந்து, முதல் நாள் இரவில் தலைக்கு தடவி, மறுநாள் காலையில் தலைக்கு ஷாம்பு தடவி குளித்து வர, முடி நன்கு வளரும். கூந்தல் நன்கு வளர உதவும். கலவையை கூந்தல் உதிர்வு இடங்களில் தடவ வேண்டும்.

3. ஸ்ட்ராபெரி..

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெரி-8, மயோனைசே 2 தேக்கரண்டி.

செய்முறை:

ஸ்ட்ராபெரியை மயோனைசேவுடன் கலந்து தலைக்கு தடவ வேண்டும்; இதை தடவும் முன், கூந்தலை குறைந்தது 15 நிமிடங்களாவது ஊற வைத்து பின் இதை தடவவும். பின் தலைக்கு குளிக்கவும். ஸ்ட்ராபெரியில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால், கூந்தலை பலப்படுத்தும்.

4. முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்..

தேவையான பொருட்கள்:

முட்டை-1, ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி, வெள்ளை வினிகர் 1 தேக்கரண்டி.

செய்முறை:

முட்டை, ஆலிவ் எண்ணெய், வினிகர் இம்மூன்றையும் கலந்து தலைக்கு தடவவும். பின் 20 நிமிடங்கள் ஊற வைத்தபின் தலைக்கு குளிக்கவும். ஆலிவ் எண்ணெயில் அதிக சத்துக்களும், வைட்டமின் இ சத்துக்களும் உள்ளன; இவை கூந்தலை நன்கு வளரச் செய்கின்றன.

5. வாழைப்பழ தேன்..!

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் 1, தேன் 1/4 கப், தயிர் 1/2 கப்.

செய்முறை:

வாழைப்பழம், தேன், தயிர் மூன்றையும் கலந்து தலைக்கு தடவி, 15-30 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளிக்கவும். இப்பொருட்களில் உள்ள வைட்டமின்கள், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வறண்ட கூந்தலுக்கு அளித்து, முடியை நன்கு வளரச் செய்கின்றன.

Leave a Reply

%d bloggers like this: