சிறப்புக் குழந்தை வளர்ப்பில் உதவும் 4 விஷயங்கள்..!

தம்பதியர்கள் பெற்றோராய் ஆனபின் தங்கள் குழந்தையை அன்பு, பாசம், அரவணைப்பு காட்டி வளர்ப்பது ஒரு சுகம் கலந்த மிகப்பெரிய கடமை; பொறுப்பு ஆகும். அதிலும் கடவுள் சில தம்பதியருக்கு சிறப்புக் குழந்தையை கொடுத்துவிட்டாலோ, அவர்களை விட அதிர்ஷ்டாசாலி யாரும் இலர் என்றே சொல்லலாம். என்ன இப்படி சொல்கிறோம் என்று பார்க்கிறீர்களா? யாரால் இறைவன் அருளிய சிறப்புக் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ள இயலுமோ, குறையுள்ள குழந்தைக்கு குறையில்லாத வாழ்க்கையை அளிக்க முடியுமோ அவர்களுக்கு மட்டுமே அப்படிப்பட்ட தலை சிறந்த பொறுப்பு அளிக்கப்படுகிறது. 

அப்படி அருளப்பட்ட பொறுப்பை சீரும் செம்மையுமாக நிறைவேற்ற உதவும் வழிமுறைகள் பற்றி, சிறப்புக் குழந்தைகளின் வாழ்வை சிறப்பிக்கும் வழிகள் பற்றி பாதிப்பை படித்தறிவோம்..!

1. ஒப்பிடுதல்..

உங்களுக்கு சிறப்புக் குழந்தை கிடைக்க பெற்றால், ‘நான் என்ன பாவம் செத்தேன் எனக்கேன் இப்படி ஒரு குழந்தை?’ என்று கடவுளின் அருளை, உங்கள் பாவ புண்ணியங்களுடனோ, மற்றவர்களின் குழந்தையுடனோ ஒப்பிடாதீர்கள்.

2. ஊக்கம்..

உங்கள் குழந்தையை தனக்கு உள்ள குறையை எனும் வருந்தி, ஒரு கூட்டுக்குள் ஒளியும் ஜீவனாக வளர்க்காமல், அதற்கு ஊக்கம் கொடுத்து, வாழ்க்கையில் உச்சத்தை எட்ட உதவுங்கள்..

3. கவனிப்பு..

சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான கவனம் தேவை என்பதை மறவாமல், குழந்தையை கண்ணும் கருத்துமாக, சிறிதொரு குறையும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. 

4. அறிவுரை..

மற்ற குழந்தைகளின் அன்னையின் தவறான அறிவுரைகளையோ அல்லது மற்ற சிறப்புக் குழந்தைகளின் அன்னைகளின் தவறான அறிவுரையையோ செவி கொடுத்து கேளாமல், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, நலனுக்கு எது அதிக நன்மை பயக்குமோ அவ்வகை செயல்களை நன்முறையில், குழந்தையின் நன்மைக்காக உலகே எதிர்த்தாலும் செய்து முடித்து, குழந்தை வாழ்வில் வெற்றிக்கனியை ஈட்ட முயலுங்கள்..

Leave a Reply

%d bloggers like this: