மாதவிடாய் பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட 4 வழிகள்..!!

பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகளுள் மிக முக்கியமான, அதிக வலி தரும் பிரச்சனை மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி ஆகும். இந்த வலி 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும்; ஆனாலும் ஓரிரு நாளில் ஏற்படும் இந்த வலியால், பெண்கள் அடையும் வேதனைக்கு அளவேயில்லை. இவ்வேதனையை போக்கும் வகையில், அமையும் எளிய வழிமுறைகளை எடுத்துரைக்கும் வண்ணம் இந்த பதிப்பினை சமர்ப்பிக்கிறோம்.  

இயற்கை வழிகள்..!
1. உணவு..!

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வழியை போக்க வைட்டமின் இ, பி1, பி6, மெக்னீசியம், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ளவும். மேலும் வீட்டு வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெந்தயம், பொரிகடலை, பப்பாளி போன்ற உணவுகளை உண்டு வலியை குறைக்க முயலவும்..!

2. சூடு..!

இந்த வலியினால் ஏற்படும் வேதனையை குறைக்க சூடான உணர்வு உதவும். அவ்வகை உணர்வு கொண்ட தலையணை அல்லது துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பது போல், ஒற்றி எடுத்து வலி நிவாரணம் பெறவும்.

மருத்துவ வழிகள்..
3. ஊசி..

வலி மிகவும் தாங்க முடியாத நிலையை எட்டினால், அச்சமயம் மருத்துவரின் ஆலோசனையுடன் ஊசி போட்டு கொள்ளலாம். அடிக்கடி இந்த முறையை பின்பற்றுவது நல்லது அல்ல.

4. மாத்திரைகள்..

வலி மிகவும் தாங்க முடியாத நிலையை எட்டினால், அச்சமயம் மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி இந்த முறையை பின்பற்றுவது நல்லது அல்ல.

Leave a Reply

%d bloggers like this: