தோற்றத்தை மிளிர வைக்கும் 4 பொருட்கள்..!

ஒரு பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமான மாற்றங்களை சந்திப்பார்கள். வாழ்க்கையில் புதுமையான அனுபவத்தை சந்திக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு அதே சமயம் அதனை கையாளத் தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவர். 

பொதுவாக பெண்கள் தங்கள் அழகில் கொஞ்சம் அக்கறை செலுத்துபவராக இருப்பர்,கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றத்தினால் அதன் பிரதிபலிப்பு சருமத்திலும் தோன்றிடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சருமப் பிரச்சனைகள் தோன்றிடும். இதற்கு தீர்வு காணும் வகையில் எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்களைக் கொண்டு கர்ப்பிணிப்பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்.

கற்றாழை ஜெல் 

சருமத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது இந்த கற்றாழை ஜெல். இதிலிருக்கும் அற்புதமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவிடும். இது எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனை எளிதாக வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் சருமப்பிரச்சனை இருக்கும் இடங்களில் இந்த ஜெல்லை எடுத்து தடவுகள். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். ஜெல் தடவிய சிறிது நேரத்திலேயே சருமம் ஜெல்லை உறிந்து கொள்ளும் ஆனாலும் நீங்கள் கழுவுவதால் அந்த பிசுபிசுப்புத்தன்மை இருக்காது. இதனை தினமும் கூட பயன்படுத்தலாம்.

வெள்ளரி 

சருமத்தில் வெவ்வேறு நிற மாற்றங்கள் உண்டாகியிருந்தால் அதனை போக்க இதனை முயற்சிக்கலாம். வெள்ளரியை அதன் விதைகளை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மைய அரைத்த அந்த விழுதுடன் பால் இரண்டு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

விட்டமின் இ 

சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க விட்டமின் இ என்கிற சத்து மிகவும் அவசியமாகும். உங்கள் உடலில் விட்டமின் இ குறைந்தால் கூட சருமத்தில் அதன் பாதிப்புகள் தெரியும். இச்சமயத்தில் சருமத்திற்கு மட்டும் என்னென்ன க்ரீம்கள், ஜெல் தடவினால் மட்டும் சருமம் பொலிவடையாது. சருமத்திற்கு தேவையான சத்துக்களையும் நாம் கொடுக்க வேண்டும். அதனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் விட்டமின் இ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி 

பப்பாளி சருமத்திற்கு மிகவும் நல்லது. பப்பாளிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரண்டு தேக்கரண்டி பப்பாளி பழக்கூழுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள். 15 நிமிடங்களில் நன்றாக காய்ந்ததும் கழுவிவிடலாம். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமைந்திடும். இதனை சருமத்தில் பயன்படுத்துவதற்கு பதிலாக உட்கொள்ளவும் செய்யலாம். இதுவும் மிகவும் நல்லது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

Leave a Reply

%d bloggers like this: