கர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா? கூடாதா?

பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா? கூடாதா? என்ற மிகப்பெரிய சந்தேகம் மனதை உருத்திக் கொண்டே இருக்கிறது. இது பற்றிய உண்மை நிலை என்ன என்பதை இந்த பதிப்பில் படித்துத் தெரிவோம்.. 

ஏன் குடிக்கக் கூடாது..?

காபி மற்றும் தேநீரில் காஃபின் என்ற பொருள் உள்ளது. இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுக்கும். இதுவும் ஒரு வகை போதை பொருளே! நாம் காபி அல்லது தேநீர் அருந்தியவுடன் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்கிறோம் அல்லவா..? அதற்கு இந்த காஃபினே காரணம்.

கர்ப்பிணிகளான நீங்கள் காபி அல்லது தேநீர் அருந்தும் போது, இந்த போதைப்பொருள் உங்களுக்குள்ளும், உங்களுக்குள்ளே வளரும் குழந்தைக்குள்ளும் செல்லும் அபாயம் உண்டு. வளர்ந்தவரான உங்களால், உங்கள் உடல் செயல்பாட்டால், காஃபினை எளிதில் செரித்துவிட இயலும்..

ஆனால், உங்கள் குழந்தையால் முடியாது; ஏனெனில் உங்கள் குழந்தை இன்னும் குழந்தை என்ற வடிவத்தையே முழுமையாக பெறாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காரணத்திற்காக தான், கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கையிலும், காபி மற்றும் தேநீர் அருந்தக் கூடாது என்று முன்னோர் கூறியுள்ளனர்.

எவ்வளவு காஃபினை உட்கொள்ளலாம்??

காஃபின் உட்கொள்ளும் அளவு ஒரு நாளைக்கு 200மிகி என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதை மீறினால் ஆபத்து.

காஃபின் காபி மற்றும் தேநீரில் மட்டும் இருப்பதில்லை; நீங்கள் உட்கொள்ளும் சளி மற்றும் தலைவலி மாத்திரைகளில், சாக்லெட்களிலும் இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்தே ஒரு நாளைக்கு 200மிகி என்ற அளவு.

அதனால், காபி மற்றும் தேநீர் எடுத்துக் கொள்வதை நிறுத்தி, பால், பழச்சாறு, தண்ணீர் என்ற உடலுக்கு நலம் பயக்கும் பானங்களை அருந்துங்கள், கர்ப்பிணிகளே! உங்கள் குழந்தைக்கு, கருவில் இருக்கும் போதே சிறந்த அன்னையாக மாறுங்கள்..!

Leave a Reply

%d bloggers like this: