குழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..!!

குழந்தைகளை பல் துலக்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும் பாடாக இருக்கும். அவர்கள் சாக்லேட் மற்றும் இனிப்பு உணவுகளை விரும்பி உண்வார்கள். சரியாக பல் துலக்கவில்லை என்றால், பற்களில் சொத்தை, பல வகையான உணவுகளை உண்பதால் பற்களில் மஞ்சள் கறை மற்றும் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவிக்கும். நாம் என்னதான் சொன்னாலும் குழந்தைகளை சரியாக பல் துலக்க செய்வது மிகவும் கடினமான ஒன்று. 

நாம் என்னதான் பற்பசைகளை கொண்டு பல் துலக்கினாலும் அவற்றில் இருக்கும் இராசயனங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. அதற்கு என்ன தான் தீர்வு என்றால், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பார்கள்” பெரியவர்கள். முடிந்த வரை வேப்பங்குச்சியை பயன்படுத்தலாம். இது வாய் மற்றும் வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது. இப்போதைய நகர வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று தான். அதற்கு நீங்கள் இயற்கை முறையில் வீட்டிலேயே பற்பசை தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

வேப்பிலை பவுடர் – 1 தேக்கரண்டி,

கிராம்பு பொடி – 1 தேக்கரண்டி,

தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி,

பேக்கிங் சோடா – 3 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அறைவெப்ப நிலையில் வைக்க வேண்டும். பின் அவற்றை உபயோகிக்கலாம்.

வேப்பிலை பவுடர்

வேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது. வேப்பிலையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீங்குவதோடு, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

கிராம்பு பொடி

இது மருத்துவ தன்மை கொண்ட பொருள். இது கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது . இது பல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்போன்றவற்றை அழிக்கும்.

இந்த இயற்கை பற்பசையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. மேலும் இந்த பற்பசையில் ஃபுளூரைடு இல்லை. இதை கொண்டு தினமும் பற்களைத் துலக்கினால், பற்களை வெண்மையாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்த பற்பசையை கொண்டு தினமும் காலை மற்றும் இரவில் பற்களைத் துலக்கி வந்தால், வாயில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி, வாயின் ஆரோக்கியம் மேம்படும்.

Leave a Reply

%d bloggers like this: