குழந்தையின் முதல் 5 வருடத்தில் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

உங்களுக்கு இது பற்றி தெரியாமல் இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். குழந்தை பிறந்த முத்த ஐந்து வருடத்தில் மிகவும் வேகமாக வளரும். இந்த விளையாட்டுத்தனமான காலத்தைதான் குழந்தை மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியலாளர்கள் ஒரு குழந்தைக்கு கற்றல் மற்றும் புரிந்துணர்வுக்கான மிக முக்கியமான காலம் என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவர்கள் கூற காரணங்கள் உள்ளது. முதல் ஐந்து வருடத்தில் உங்கள் குழந்தை மீது ஏன் அதிக கவனம் தேவை என்ற 6 காரணங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. 

1 விரைவான மூளை வளர்ச்சி

குழந்தை உங்கள் கருப்பையை விட்டு வெளியே வந்ததும் அவர்கள் மூலையில் கோடிக்கணக்கான நியூரான்கள் இருக்கும். இப்போது அவை ஒன்றோடொன்று தொடர்புகொண்டு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உங்கள் குழந்தைகள் செய்யும் பல்வேறு நடவடிக்கையின் மூலம் அவர்கள் நரம்பியல் மண்டலம் வளர்ச்சி அடையும். எனவே அவர்களை சுற்றி ஆரோக்கியமான சூழ்நிலை இருத்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் தருவது அவசியமாகும்.

2 எளிதில் கற்றுக்கொள்ளகூடும்

அவர்களுக்கு உணர்ச்சி, புலனுணர்வு மற்றும் உடல் உணர்ச்சிகளின் ஆரோக்கியமான சமநிலை அவசியம். இந்த சமநிலை அவரின் முதல் 5 ஆண்டுகளில்தான் உருவாக்கப்படும். இது உங்கள் குழந்தையின் மூளை மிகவும் நெகிழ்வாக இருக்கும் கட்டமாகும். எல்லாவற்றையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும், மேலும் அவர்கள் வயது வந்தவர்களாக தன் அடையாளத்தை வடிவமைப்பதில் அவர்களுக்கு உதவுகிறது.

3 பேச கற்றுக்கொள்வார்கள்

இந்த காலகட்டத்தில்தான் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை கற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமின்றி ஒலி எழுப்பி பேச ஆரம்பிக்கவும் இதுதான் சரியான சமயம். அவர்களின் முதல் மொழி என்னவாக இருக்கவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ அதுவே அவர்களை சுற்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

4 அடிப்படையான ஆண்டுகள்

இந்த முதல் ஐந்து ஆண்டுகளே அவர்கள் எதிர்காலத்தின் அடித்தளமாகும். ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான குழந்தைப்பருவமே எதிர்காலத்தில் அவர்களை சிறந்த வாலிபர்களாக மாற்றும்.

5 சிறிய விஷயங்களும் மாற்றத்தை உண்டாக்கும்

அவர்களை சுற்றி உள்ள அனைத்து விஷயங்களுமே அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும். குறிப்பாக எதிர்காலத்தில் அவர்கள் உபயோகபடுத்த போகும் கிராபிக்ஸ், மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை இப்போதே பெறச்செய்யுங்கள்.

6 தவறவிட்டு விடாதீர்கள்

 

 

 

அவர்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் இவற்றை தவறவிட்டால் எதிர்காலத்தில் நீங்கள் இழந்தவைப்பற்றி நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கும். எனவே அதிக கவனம் செலுத்துங்கள்.

Leave a Reply

%d bloggers like this: