பிரசவத்திற்கு பின் பெண்கள் ‘ மிஸ் ‘ செய்யும் 8 விஷயங்கள்..!

தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த இனிமையான வரமாகும். கர்ப்பமான செய்தி தெரிந்ததும் அனைத்து பெண்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், போக போக தான் பிரச்சனை ஆரம்பிக்கும். தலைச்சுற்றல், வாந்தி, கால் வீக்கம், உடல் சோர்வு ஆகிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். குழந்தை வெளியே வந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைப்பார்கள். என்ன தான் பல சிக்கல்களை சந்தித்தாலும், தாய்மை ஒரு அழகான விஷயமே. 

பிரசவத்திற்குப்பின் பெண்கள் தவறவிடும் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

1 புன்னகை

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அனைவரும் உங்களை நேசிப்பார்கள். அந்நியர்கள் முதல் அண்ணன் வீட்டு குழந்தைகள் வரை அனைவரும் உங்களை பார்த்து புன்னைகைப்பார்கள். பொதுவாக புன்னகையின் சக்தி குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில், அது மிகவும் பலம் வாய்ந்தது. உங்களை நாள் முழுவதும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும் சக்தி அதற்கு உண்டு.

2 கவனம்

கர்ப்பமாக இருக்கும் பொழுது நீங்கள் எங்கே சென்றாலும் அனைவரின் பார்வையும் உங்களின் மீதுதான் இருக்கும். உங்கள் உடல்நலன் பற்றியும் குழந்தையை பற்றியும் விசாரிப்பார்கள். உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். ஆனால், குழந்தை பிறந்தவுடன் அதை கவனித்துக்கொள்ளவே நேரம் சரியாய் இருக்கும் என்பதால் உங்களை கவனிக்க நேரம் இருக்காது. இருந்தாலும், குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.

3 அக்கறை

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்களை மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் பார்த்துகொள்ளவர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று பார்த்து பார்த்து செய்வார்கள். இதை வெறும் கடமைக்காக செய்யாமல் பாசத்துடன் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4 உணவு

கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் உங்களுக்காக மட்டுமல்ல உங்களுக்குள் வளரும் குழந்தைக்காகவும் சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட ஆசைப்படும் உணவுகளை எல்லாம் சாப்பிட அனுமதியளிக்கப்படுவீர்கள். அதுமட்டுமல்ல நிறையவும் சாப்பிடலாம். இக்காலகட்டத்தில் பிறர் உங்களை தவறாக நினைக்கமாட்டார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு இதற்கெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள்.

5 முகப்பொலிவு

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது, அடிக்கடி, பிறர் சொல்லி கேள்விப்படும் விஷயம் என்னவென்றால் உங்கள் முகம் மிக பொலிவுடன் இருப்பதே. இதற்கு காரணம், கர்ப்பமாக இருக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உங்களுக்கு கூடுதல் அழகை தரும். ஆனால், பிரசவத்திற்கு பிறகு முகம் பொலிவிழந்து விடும்.

6 மாதவிடாய்

கர்ப்பமான காலத்தில் மாதவிடாயிலிருந்து விடுதலை கிடைப்பதால், இது கர்ப்பிணி பெண்களுக்கு புது தெம்பை தரும் என்றே சொல்லலாம்.

7 சலுகைகள்

கர்ப்பமாக இருக்கும் போது உங்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பார்கள். மேலும், வெளியே சென்றால், மற்றவர்கள் உங்களுக்கு எழுந்து நின்று இடம் கொடுப்பார்கள். உங்களிடம் நன்றாக நடந்துகொள்வார்கள். ஹோட்டல்கள், விமான டிக்கெட்கள் ஆகியவற்றில் உங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். ஆனால், இதையெல்லாம் பிரவத்திற்குபின் நீங்கள் இழந்துவிடுவீர்கள்.

8 குழந்தையின் அசைவுகள் (உதை)

உலகிலேயே மிகவும் அழகான அனுபவம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவை உணர்வது. அதிலும், குழந்தை உதைப்பதை அனைத்து தாய்மார்களும் ரசிப்பார்கள். அந்த சுகமே தனிதான். இது நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமே உணரக்கூடிய ஒன்று. இதை நீங்கள் காலம் முழுவதும் எண்ணி மகிழ்வீர்கள். ஒரு உயிரை உருவாக்க கூடிய தாய்மையின் அழகை அப்பொழுதுதான் உணர்வீர்கள்.

Leave a Reply

%d bloggers like this: