பிறந்த முதல் நாளிலிருந்து ஒரு வயது வரை குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், குழந்தைகள் தங்கள் முதல் வயதில் வேகமாக வளருவார்கள் என்று. ஆனால் ஓவ்வொரு குழந்தைக்கும் இந்த வளர்ச்சி நிலைகள் மாறுபடும். இந்த கட்டுரை உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளை பற்றியதாகும். உதாரணமாக, பொருட்களை எடுத்தல், தவழுதல், சிரித்தல், பேசுதல் போன்றவை ஆகும். இவை ஒரு குழந்தையிடம் எளிதில் அடையாளம் காணக்கூடிய அவர்களின் திறன்கள், மொழியியல் மற்றும் உணர்ச்சி மட்டங்கள் பற்றியவையாகும்.  

1 மாதம் 1

ஒரு மாத குழந்தைகள் தங்கள் தலையை உயர்த்தி பார்ப்பார்கள், 8-12 அங்குல தூரத்தில் உள்ள பொருட்கள் அல்லது மற்றவர்களின் முகங்களின் மீது கவனம் செலுத்துவார்கள், அவர்களின் கைகள் பெரும்பாலும் மூடியிருக்கும். அவர்களால் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களை விரும்பி பார்ப்பார்கள். சில குழந்தைகளால் சத்தம் எழுப்பவோ அல்லது சிரிக்கவோ முடியும்.

2 மாதம் 2-3

இந்த பருவத்தில் உள்ள குழந்தைகள் உடலையோ, தலையோ உயர்த்துவார்கள். மேலும் உதைக்க கூட முயலுவார்கள். ஆனால் இது அவர்கள் குப்புற படுத்திருக்கும்போதும், திரும்பி படுத்திருக்கும்போதும் மட்டுமே முடியும். அவர்களால் கைகளை திறந்து மூடவும், பொம்மைகளை பிடித்து கொள்ளவும் கூட முடியும். விசித்திர சத்தங்களை எழுப்பவும், பரிட்சியமான முகங்களை பார்த்து சிரிக்கவும் தொடங்குவார்கள்.

3 மாதம் 4-7

இந்த பருவத்தில் குழந்தைகள் தொடர்ச்சியாக சிரிக்க முடியும். கேட்கும் குரல்களின் தன்மையை உணர முடியும் அதாவது கோபமாக பேசுகிறார்களா அல்லது சந்தோசமாக பேசுகிறார்களா என்று புரிந்து கொள்வார்கள். மேலும் இருபுறமும் உருளவும், வண்ணங்களின் வேறுபாடுகளையும், வாயில் வைக்கும் பொருள்களின் வித்தியாசங்களையும், எந்தவித துணையுமின்றி உட்காரவும், பொருட்களை அவர்களை நோக்கி இழுக்கவும் முயற்சிப்பார்கள். அருகில் உள்ள நாற்காலியை பிடித்துக்கொண்டு எழுந்துநிற்க முயற்சிப்பார்கள்.

4 மாதம் 8-12

இந்த பருவத்தில் குழந்தைகள் மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு திறன் இருப்பார்கள். மேலும் தினமும் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிப்பதோடு போன் உபயோகித்தல், கோப்பையில் தேநீர் குடித்தல் போன்றவற்றை செய்ய பழகி இருப்பார்கள். புதியவர்கள் முன் வெட்கப்படுவார்கள் அப்படியிருந்தால் அவர்களின் உணர்திறன் அதிகமாகியுள்ளது என்று அர்த்தம். அம்மா, அப்பா வெளியே போகும்போது அழத்தொடங்குவார்கள். முன்னர்போல் இல்லாமல் ‘அம்மா’,’அப்பா’ என்று பேசத்தொடங்குவார்கள். கை குலுக்குதல், வெளியே போகும்போது டாட்டா சொல்லுதல், சுற்றி இருப்பர்வர்கள் பேசுவதை போல் பேசிக்காட்டுவது என்று அசத்துவார். இந்த பருவம்தான் அவர்கள் தெளிவாக பேசத்தொடங்கும் பருவமாகும்.

உடல்ரீதியான முன்னேற்றம் என்னவென்றால் தவழுவதிலிருந்து தானாக எழுந்து நிற்க தொடங்குவார்கள். அதுமட்டுமில்லாமல், பொருட்களை அடையாளம்காட்ட விரல்களை பயன்படுத்துதல், பொருட்களை வெளியே எடுத்தல், புத்தக பக்கங்களை புரட்டுதல் போன்றவற்றையும் செய்வார்கள். இதே பருவத்தில்தான் நாற்காலி மேல் ஏறி விளையாடவும் பழகுவார்கள்.

இவைதான் குழந்தைகளிடமிருந்து பெற்றோர்கள் அவர்களின் முதல் வயதிற்குள் எதிர்பார்க்கக்கூடும். இந்த ஒரு வருடம் நம்பமுடியாததாகவும் அவர்களின் வளர்ச்சி வேகமாகவும், தொடர்ச்சியான அழுகை, தூக்கமில்லாத இரவுகள் என இவற்றிற்கு மத்தியில் அவர்களின் வளர்ச்சி ஆச்சரியமளிப்பதாகவும் இருக்கும். எனவே இந்த அன்பான மற்றும் ஆச்சரியம் நிறைந்த இந்த விளையாட்டுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: