புதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்!

நீங்கள் பார்க்கும் படங்களிலும் சரி, புத்தகங்களிலும் சரி இது இருப்பதில்லை. பிற தாய்மார்களிடம் பேசும்போதும் கூட தாய்மையின் அழகான காலகட்டத்தை எடுத்து சொல்வார்கள். ஆனால் அக்காலகட்டத்தில் பெண்கள் இழக்கும் பல விஷயங்களை அவர்கள் குறிப்பிடுவதில்லை. ஒரு பக்கம் தங்கள் வயிற்றின் அளவு பெரிதாகி கொண்டே போவதை பெண்கள் உணர்ந்தாலும், பின் அது தழும்புகளை விட்டுச்செல்லும் என்பதையும் அவர்கள் மறப்பதில்லை. இந்த அழகு குறிப்புக்கள் ஒவ்வொரு தாயும் அழகாக பின்பற்ற வேண்டியவையே. 

1 முகப்பொலிவு

பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்கள் முகப்பொலிவை இழக்க நேரிடும். கவலை வேண்டாம். முகப்பொலிவை தக்கவைத்து கொள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பெர்ரி, பிளம்ஸ், ஆரஞ்சு, திராட்சை, டார்க் சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

2 நீர்சத்து

பிரசவத்தின் பொது நிறைய திரவங்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும். அதை மீட்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகளையும் சேர்த்து கொள்ளலாம்.

3 தோல் சுருக்கங்கள்

பிரசவத்திற்கு பின் வயிற்றில் சுருக்கங்கள் ஏற்படும். இதனை போக்க தினமும் வயிற்றில் ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மேலும் குளித்த பிறகு தரமான மாய்ஸ்சரைசரை வயிற்றில் தடவுங்கள்.

4 கரும்புள்ளிகள்

கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதுவே பிரசவத்திற்கு பிறகு குறைந்து விடும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது வெள்ளை அல்லது கருந்திட்டுகள் உருவாகும். இதனை சரிசெய்ய மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்துங்கள். குறிப்பாக SPF உள்ளதை பயன்படுத்துங்கள். வீடு வைத்தியங்களான புதிதாய் நறுக்கிய பூண்டை அந்த இடங்களில் பூசுவது, முகத்தை பன்னீர் கொண்டு அவ்வப்போது துடைப்பது ஆகியவையும் அடங்கும்.

5 கருவளையங்கள்

குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் தூக்கம் அறவே குறைந்து விடும். இதனால் கண்கள் வீங்கி கருவளையங்கள் உருவாகும். இதை சரிசெய்ய தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை 15-20 நிமிடங்கள் வரை கண்களில் வைத்து எடுங்கள். மேலும் டீ பைகளை குளிந்த நீரில் நனைத்து கண்களில் வைத்து ஒற்றி எடுத்தால் கண் வீக்கம் குறையும்.

6 குழந்தையுடன் தூங்குங்கள்

இது எல்லா தாய்மார்களுக்கும் அவசியமான ஒன்று. போதுமான ஓய்வு தேவையான ஒன்று. பெரும்பாலான தாய்மார்களை குழந்தைகள் தூங்க விட மாட்டார்கள். இதற்கு ஒரே தீர்வு, குழந்தை தூங்கும் போதே நீங்களும் தூங்க வேண்டும்.

7 முடி உதிர்தல்

இது பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் சந்திக்கும் மற்றோர் பிரச்சனை. உங்கள் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் உங்கள் தலைமுடியை பராமரிக்க உங்களுக்கு நேரம் கிடைக்காது. எனினும், சிறுது நேரம் ஒதுக்கி உங்கள் கூந்தலை பராமரியுங்கள். தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக தலையில் தேங்காய் எண்ணெய் தடவி பின் குளியுங்கள். இதனால் முடி வறட்சியடைந்து உதிர்வது தவிர்க்கப்படும்.

8 சரும வறட்சி

பிரசவத்திற்கு பின் சருமம் மற்றும் உதடுகள் வறண்டு, நகங்கள் உடையக்கூடியதாய் இருக்கும். இதற்கு காரணம் போதிய சத்துக்கள் இல்லாமையே. இதை சரி செய்ய தினமும் போதிய மாய்ஸ்சரைசர் தடவுங்கள். Cocoa பட்டர் நிறைந்துள்ள கிரீம்களை பயன்படுத்துங்கள். மேலும் தகவல்களுக்கு உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

9 உடற்பயிற்சி

உடல் எடையை குறைத்து மாசில்லாத சருமத்தை பெற உடற்பயிற்சி செய்யுங்கள். பிரசவத்திற்கு பின் சிறுது நாட்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. 10-15 நிமிடங்கள் வரை தினமும் நடைப்பயிற்சி செய்தால் அதுவே போதுமானது.

இந்த குறிப்புகளை பின்பற்றினால் நிச்சயம் பிரசவத்தின் பிறகும் உங்கள் வாழ்க்கையில் அழகை பேணிக்காக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: