பெண்களின் இடுப்பெலும்பு வலிமை பெற..!!

பெண்களே! நீங்கள் எந்த வயதினராயினும் உங்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை. நீங்கள் குழந்தையை பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில், முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், உங்கள் உடலின் இருப்பெலும்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக அவசியம். உங்கள் இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாமா நண்பர்களே??  

தேவையான பொருட்கள்

தோல் உள்ள உளுந்து – 200 கிராம், புழுங்கல் அரிசி – 100 கிராம், தேங்காய் – ஒரு மூடி, நெய், நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி, ஏலக்காய் – சிறுதளவு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை

உளுந்தையும், அரிசியையும் தனித்தனியே நன்றாக சுத்தம் செய்து அரைத்த மாவை ஒன்றாக கலந்து, இதில் தேவையான அளவு உப்பு போட்டு, சிறுது தண்ணீர் தெளித்து கெட்டியாக சற்றே கரகரப்பான பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதாவதுபுட்டு மாதிரி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

புட்டு மாதிரி உதிரியாக வேக வைக்கவும்.

வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும். புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்து கிளறவும். சூடாக சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமள், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

பலன்கள்

உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண்களுக்கு கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும் ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

குறிப்பு

உளுந்தை சற்று லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். நல்ல வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: