உங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள 6 வழிகள்..!

பெற்றோராய் இருப்பதில் மிகவும் சந்தோசமான ஒரு விஷயம் உங்கள் குழந்தை மகிழ்ச்சியாய் இருப்பதை பார்ப்பதாகும். சில சமயங்களில் பெற்றோர் வாழ்க்கையில் பிடித்தமில்லாமல் மனஅழுத்தத்துடன் இருப்பதாய் காண்பார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் உங்கள் குழந்தையை பார்ப்பது கொள்வது மிகவும் கடினமாகும். இந்த நிலையிலிருந்து உங்கள் செல்லக்குழந்தையை மீட்க என்ன செய்யவேண்டும்? சில விஷயங்கள் உங்கள் குழந்தையின் வாழ்க்கை மீதான கண்ணோட்டத்தை பாதிக்கும், அவை உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். உங்கள் குழந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க நீங்கள் சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுக்கலாம். 

1 நம்பிக்கை

உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ எதாவது கெட்டது நேருமாயின் நம்பிக்கை கோட்டில் கவனம் செலுத்துங்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் உள்ள நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்த சொல்லித்தர வேண்டும். நீங்களும் அப்படியே வாழ்ந்துகாட்ட வேண்டும். நம்பிக்கை நிறைந்த உங்களை பார்க்கும் போது அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் ஓட வேண்டும். இது அவர்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகளை எப்படி திறமையாக சமாளிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை முன்னெடுத்து வாழ்வதற்கு பயன்படும். உதாரணமாக, மழை பெய்யும் நேரத்தில் உங்கள் குழந்தை வெளியே செல்ல முடியாது என வருத்தப்படும் போது நீங்கள் மழை நின்றபின் அதில் விளையாடுவதையும், மற்றும் காகித கப்பல் செய்து விளையாடுவதையும் எடுத்துக்கூறி நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

2 புகார் கூறாதீர்கள்

எந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தை மீது எதற்காகவும் புகார் கூறாதீர்கள். இப்படி புகார் கூறுவது அவர்களின் நம்பிக்கையை சிதைப்பதோடு, அவர்களின் எதிர்மறை எண்ணங்களையும் அதிகரிக்கும். உங்கள் குழந்தையும் இதையே பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். அதன்பின் அவர்களும் நேர்மறை எண்ணங்களை காட்டிலும் எதிர்மறை எண்ணங்களிலேயே கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள்.

3 ஊக்குவித்தல்

உங்கள் குழந்தைகளுக்கு சின்ன சின்ன இலக்குகளை நிறைய கொடுங்கள். முக்கியமாக அவை அவர்களால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் அதை வெற்றிகரமாக முடிக்கும்போது அவர்களை பாராட்டுங்கள். மேலும் அவர்களின் வெற்றியை நினைத்து அவர்களை பெருமைகொள்ள செய்யுங்கள்.இது அவர்களுக்கு வெற்றியின் அருமையை புரிய வைக்கும். தொடர்ந்து வெற்றிகள் பெற அவர்களை ஊக்குவிக்கும். சின்ன சின்ன பரிசுகள் தருவது அவர்களை இன்னும் உற்சாகமாக்கும்.

4 சுதந்திரமளித்தல்

உங்கள் குழந்தைகளை அவர்களின் வேலைகளை சுயமாக செய்ய பழக்குங்கள். இது அவர்களின் கற்பனை திறனை அதிகமாக்கும். இந்த சுதந்திரம் அவர்களின் வருங்காலத்தில் இன்னும் பல விஷயங்களில் சுயமாய் செயல்பட ஊக்கமளிக்கும். உதாரணமாக அவர்கள் நாடகம் போட்டால், அதை மனமார பாராட்டவேண்டும். இது அவர்களின் சுயமரியாதை அதிகமாக்குவதோடு அவர்கள் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

5 மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்தல்

முடிந்தவரை உங்கள் குழந்தையிடம் மனஅழுத்தம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பண பிரச்சினையோ அல்லது உடல்நிலை பிரச்சினையோ குறிப்பிட்ட வயது வரை அவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருக்குமாறு நம்பிக்கை கொடுங்கள். ஒருவேளை அவர்கள் சிறிய வயதிலேயே இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அந்த வயதில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாது ஏன் நடக்கிறது என்றும் தெரியாது. இது அவர்களின் உலகம் மீதான கண்ணோட்டத்தையே பாதிக்கும். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து அவர்களை தள்ளியேவையுங்கள்.

6 பிரச்சினைகள்

குழந்தைகள் பிரச்சினையுடன் வரும்போது அவர்களை கவனிப்பதோடு அந்த பிரச்சினைக்கான தீர்வுகளையும் சொல்லுங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை அவர்களே சமாளிக்கலாம் என்று சொல்லிக்கொடுங்கள். பிரச்சினைகள் மீதான அவர்களின் பார்வையை மாற்ற முயலுங்கள். அவர்களால் முடியாது என்று சோர்ந்துபோனால், தொடர்ந்து முயற்சிக்கவும் பிரச்சினைகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் பழக்குங்கள். ஒருபோதும் அவர்கள் நம்பிக்கை இழக்க அனுமதிக்காதீர்கள். 

Leave a Reply

%d bloggers like this: