உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..!!

நாம் பல நேரங்களில் உணவில் சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஆரோக்கிய அம்சத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறோம்; அது தவறு. சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம். அந்த 5 உணவு பொருட்கள் எவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி, இந்த பதிப்பில் படித்தறியலாம்..! 

மஞ்சள்

நீண்ட நெடுங்காலமாக சமையலுக்குப் பயன்படும் மஞ்சள், நம் உடலுக்குச் சிறந்த அருமருந்தாக உள்ளது. மூட்டு வாதம், பெருங்குடல் புண், செரிமானக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் மிக நல்லது.

லவங்கப்பட்டை

நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த வரப்பிரசாதமாக லவங்கப்பட்டை உள்ளது. இதை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைகிறது.

பூண்டு

இதய நோய் வராமல் தடுக்கும் பூண்டு, ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பூண்டுக்கு புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் திறன் உண்டு. பூண்டு அதிகம் உண்பவர்களுக்கு பெருங்குடல் மற்றும் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறைகிறது.

இஞ்சி

மலச்சிக்கல், கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். செரிமானத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது. மூட்டு வாதம் உள்ளவர்கள் இஞ்சியைப் பயன்படுத்தினால் வலி குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெந்தயம்

நெஞ்செரிச்சல் அறிகுறிகளைச் சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களைக் குறைக்கவும் உதவுகிறது

Leave a Reply

%d bloggers like this: