கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை பற்றி நம்பக்கூடாத 5 கட்டுகதைகள்..!

கர்ப்பகாலத்தில் உடலுறவை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியுமா? பெண்களும் கர்ப்பகாலத்தில் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள். இது ஆண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். கர்ப்பகால உடலுறவு என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். கர்ப்பம் முதல் மூன்று மாதங்கள் மற்றும் கடைசி நான்கு வாரங்கள் தவிர, மற்ற காலங்களில் உடலுறவை நன்கு அனுபவித்ததாக சில ஜோடிகள் கூறுகிறார்கள். இங்கு கர்ப்பகாலத்தில் உடலுறவை பற்றிய 5 கட்டுக்கதைகளை பார்க்கலாம்.

1 கருச்சிதைவை ஏற்படுத்தும்

கர்ப்பகால சுருக்கத்தின் போது பெண்கள் அனுபவிக்கும் பெரிய O என்பது சாதாரணமான ஒன்று. உண்மையில், கர்ப்பகாலத்தில் தசைகள் சுருக்கமடைந்திருப்பதால் தான் இது ஏற்படுகிறது. இந்த சுருக்கங்கள் லேசானவையாகவும், இறுதியில் மறைய கூடியவையாகவும் இருக்கும். எனவே அடுத்த முறை உடலுறவின் உச்ச நிலையின் போதும், அதன் பிறகும் கூட நீங்கள் சுருக்கங்களை உணருவீர்கள்.

2 குழந்தையின் தலையில் காயம் ஏற்படும்

இது பொதுவாக சொல்லப்படும் மிகவும் தவறான கருத்து. உங்கள் குழந்தை கருப்பையில் இருக்கும் ஜவ்வினுள் முழுமையான பாதுகாப்புடன், மிகவும் பத்திரமாக இருக்கும். இந்த ஜவ்வானது சளி போன்ற ஒரு பொருளால் கருப்பை வாயில் மூடப்பட்டுள்ளது. இது கருப்பையினுள் பாக்ட்டீரியா மற்றும் வைரஸ் போன்றவை நுழைவதை தடுக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆழமாக உடலுறவு கொண்டாலும், அது உங்கள் குழந்தையின் தலையை பாதிக்காது.

3 நாங்கள் உடலுறவு கொள்வது குழந்தைக்கு தெரியுமா?

இது கேட்பதற்கு வேடிக்கையானதாகவும், விநோதமானதாகவும் இருக்கிறது. தங்களின் காதலையும், காமத்தையும் குழந்தை அறிந்து கொள்ளுமோ என கவலைப்படுகிறார்கள். நீங்கள் கருவில் இருக்கும் போது, உங்கள் பெற்றோர் கொண்ட உடலுறவு உங்களுக்கு தெரிந்ததா அல்லது உங்களுக்கு நினைவிருக்கிறதா என யோசியுங்கள். கவலைப்படாதீர்கள், உங்கள் குழந்தைக்கு விசேஷ நடவடிக்கை பற்றி ஏதும் தெரியாது அல்லது நினைவில் கொள்ளாது.

4 கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்து கொள்ள முடியாது

இது முற்றிலும் உண்மையல்ல. இதற்காக உங்கள் காதலை அதிகரிக்க கூடிய இந்த செயலை நீங்கள் தவிர்க்க வேண்டியதில்லை. கர்ப்பகால உடலுறவில் அதிக பொறுமை அவசியம். நீங்க உச்சநிலையை அடைய உங்கள் மனைவிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களது வயிறு மற்றும் மார்பங்களில் எந்த வித அழுத்தத்தையும் கொடுக்காதீர்கள். கர்ப்பகாலத்தில் உங்களின் காதலை அதிகரிக்க செய்யும் நேரங்களில் மிகவும் பொறுமையாவும், வலியற்றதாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

5 வாய்வழி உடலுறவு தீங்கு விளைவிக்கும்

வாய்வழி உடலுறவு தீங்கு விளைவிக்கும் என்பது ஒரே ஒரு வழியில் மட்டுமே. வாயால் பெண்களில் அந்தரங்க உறுப்பில் ஊதினால் மட்டுமே இது தீங்கு விளைவிக்கும். உண்மையில், வாய்வழி உடலுறவு என்பது கர்ப்ப காலத்தில் மிகவும் வசதியானதாக இருக்கும். அவர்கள் ஒரு வசதியான நிலையில் இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நீங்கள் செய்யலாம். சில நேரங்களில், கர்ப்ப காலத்தில் உடலுறவு கஷ்டமான ஒன்றாக இருக்கிறது, ஆனால் வாய்வழி உடலுறவு இதற்கு நிவாரணமாக இருந்து வருகிறது.

சாத்தியமில்லாதது என எதுவும் இல்லை! கர்ப்ப காலத்தில் உடலுறவு வேடிக்கையான மற்றும் திருப்திகரமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் மனைவி வசதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடுமையான எதையும் முயற்சி செய்ய கூடாது.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: