கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்..?

கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. அதற்கான பூரிப்பு அவர்களின் முகத்தில் இயற்கையாகவே வந்துவிடும். ஆனால் பெண்கள் கர்ப்பகாலத்தில் தான் பல உடல் ரீதியான மற்றும் மன ரீதியான மாற்றங்களை சந்திக்கின்றன. கர்ப்பகாலத்தில் செய்ய கூடிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள் என பல இருக்கின்றன. நம் அறிவியல் நமக்கு அதை உணர்த்தும் முன்பே, முன்னோர்கள் அதை வேறுவிதமாக சொல்லி நம்மை செய்ய வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் கர்ப்பகாலத்தின் 7 -வது மாதத்தில் பெண்களுக்கு செய்யப்படும் வளைகாப்பு. அதன் பின் ஒளிந்திருக்கும் இரகசியங்களை பார்க்கலாம்.

1 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்ற மற்ற பெண்கள், வயதில் மூத்த சுமங்கலி பெண்களை அழைத்து வளைகாப்பில் வளையல் அணிவிப்பார்கள். அவர்கள் பல குழந்தைகளை பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள். அதே போல் அந்த கர்ப்பிணி பெண்ணும் குழந்தை பெற்று ஆரோக்கியமாக இருப்போம் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது. மன திடத்தை தோற்றுவிக்கிறது.

2 வளையல் அணிவிக்கும் போது, கை விரல்களை குறுக்கி உள்ளே தள்ளும் போது, விரல் பகுதியில் வலி ஏற்படுத்தாமல், மணிக்கட்டை அடையும் போது சிறிது வலியையும் ஏற்படுத்தும். பின் கைகளை அலங்கரிக்கும். இது போல் தான் பிரசவமும், சிறிது நேர வலியை தாங்கினால், குழந்தை செல்வம் உன் வாழ்வை அலங்கரிக்கும் என்பதை உணர்த்துகிறது.

3 வளைகாப்பு எனும் போது, தங்க வளையல்களை கூட தவிர்த்து கண்ணாடி வளையல்களே முக்கியத்துவம் பெறுகின்றன. கர்ப்பிணி பெண்ணின் கையில் இருக்கும் வளையல் ஓசை குழந்தைக்கு தாலாட்டு போலவும், தாய் உனக்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்றும் குழந்தைக்கு கூறுவது போலவும் இருக்கும். இதர வளையல்களை அணியும் போது, அவற்றால் கண்ணாடி வளையல்களுக்கு நிகராக ஓசை எழுப்ப முடியவில்லை.

4 கர்ப்பிணி பெண்கள் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்ல வேண்டியிருக்கும். அப்போது வீட்டிற்கு வெளியில் கழிவறை இருந்தால் தனியாக செல்ல முனைவார்கள். அப்போது அவர்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தவும் முற்காலத்தில் இது உதவியது.

5 பெண்கள் எப்போதும் தன் தாய் வீட்டில் இருக்கும் போது, மன நிறைவாகவும் வசதியாகவும் உணர்வார்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது.

6 வளைகாப்பு என்றாலே ஏழாவது மாதத்தில் தான் செய்வார்கள். முடிந்ததும் தாய் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்கள். ஏன் என்று சிந்தித்திருக்கிறீர்களா? ஏழாவது மாதத்திற்கு பிறகு தாம்பத்தியத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான். ஏழாவது மாதத்திற்கு பின் உடலுறவில் ஈடுபட்டால், குழந்தைக்கு திரும்பிக் கொள்ளவும் மூளைவளர்ச்சியில் பாதிப்பையையும் ஏற்படுத்தும். எனவே இதை தவிர்க்கவே, வளைகாப்பு செய்து தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.

7 கர்ப்பகாலம் என்பது மூன்றாவது 3 மாத காலத்தின் தொடக்கமாகும். இந்த சமயத்தில் கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். இதற்காகவே, அனைத்து சுவையிலான உணவு வகைகளையும் கொடுப்பார்கள். 

Leave a Reply

%d bloggers like this: