குழந்தைகளுக்கான உணவுகள்: 4 திட உணவுகள்!

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அருந்தியே வாழ்ந்து வந்திருப்பர்; இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றிருப்பர், மேலும் 6 மாதங்களாக தாய்ப்பால் அருந்தியிருப்பதால், அவர்களுக்கு போர் கூட அடித்திருக்கலாம். குழந்தைகளுக்கு 6 மாத வயது ஆகிய பின்னர் நீங்கள் திட உணவுகளை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். நீங்கள் அளிக்கப்பபோகும் திட உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டும் அல்லவா? இந்த விஷயத்தில் சத்தான திட உணவுகளை தேர்ந்தெடுக்கவே இந்த பதிப்பு…! படித்து பயனடையுங்கள் தாய்மார்களே!

1. அவகேடோ கூழ்..!

அவகேடோ என்பது வைட்டமின் எ மற்றும் சி என்ற பல வைட்டமின்கள், பல சத்துக்கள் அடங்கிய பழம். குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த பழத்தின் வெளித்தோலை நீக்கி, விதையை சுற்றியுள்ள பழத்தினை வேகவைத்தோ அல்லது நேரடியாகவோ மசித்து குழந்தைகளுக்கு அளிக்கவும். இது குழந்தைகள் எளிதாக விழுங்கும் வகையில் இருக்கும்.

2. ஆப்பிள் கூழ்..

ஆப்பிள் அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் பலன் அளிக்கும் சிறந்த பழமாகும்; இது குழந்தைகளுக்கு அளிக்க ஏற்ற பழமாகும். இதன் புறத்தோலை நீக்கி, ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிதமான நீரில் வேக வைத்து, மசித்து குழந்தைகளுக்கு வழங்கவும்.

3. வாழைப்பழ கூழ்..

வாழைப்பழம் குழந்தைகளுக்கு தரவேண்டிய முக்கிய உணவு. அதிகமான வாழைப்பழங்களை குழந்தைக்கு அளித்தால், அது வயிற்றுப்போக்கிற்கு காரணமாக நேரிடலாம். அதனால், அளவாக கொடுக்கவும். வாழைப்பழத்தினை நன்கு மசித்து குழந்தைகளுக்கு அளிக்கவும்.

4. அரிசிக் கூழ்..!

காய்கறிகள் மற்றும் பழங்களை போலவே, தானிய வகைகளையும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது அவசியம். அரிசி குழந்தைகள் அறிய வேண்டிய முக்கிய உணவு. தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ¼ பங்கு அரிசியை சேர்த்து, நன்கு வேக வைத்து, மசித்து, அரிசிக்கூழ் தயாரிக்கவும்..! 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ 

Leave a Reply

%d bloggers like this: