குழந்தைகள் கருவில் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் video வடிவில்!

குழந்தைகள் கருவில் உருவாகி, வளர துவங்கி 9 மாதங்களின் முடிவில் முழுமையாய் வளர்ச்சி அடைந்து மழலையாய் மடியில் தவழ துவங்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் கருவில் என்ன செய்வார்கள்? அவர்கள் வெளியில் வரும் வரை தூங்கி கொண்டே இருப்பார்களா? அவர்கள் அழுவார்களா? அவர்கள் சாப்பிடுவார்களா அல்லது குடிப்பார்களா? நாம் இதை பற்றிய சாதாரண விஷயங்களை அறிந்திருப்போம் – குழந்தை வளர்ச்சி மற்றும் வளர்ச்சி நிலைகள், அவர்களின் விரல் மற்றும் கால் அசைவு, சில நேரங்களில் வாயில் கூட விரல் வைப்பார்கள். நீங்கள் அதிர்ச்சி அடைய கூடிய அளவிற்கு குழந்தைகள் கருவில் செய்யும் சில விஷயங்களை பார்க்கலாம்.

1 பயப்படுத்தல்

அவர்களின் அம்மாவோ அல்லது வேறு யாருமோ தும்மினாலோ, திடிரென அதிக அளவில் சப்தம் ஏற்பட்டாலோ குழந்தை பயப்படும்.

2 விக்கல்

குழந்தைகளுக்கு கருவில் இருக்கும் போதே விக்கல் எடுக்க துவங்கிவிடுகிறது. குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படும் போதெல்லாம், தாயின் வயிற்றில் அசைவுகள் ஏற்படும்.

3 உணவைச் சுவைப்பது

குழந்தை கருவில் இருக்கும் போதே அம்மாவின் இரவு உணவை சுவைக்க துவங்கிவிடுகிறது. ஆனால் நேரடியாக சுவைப்பதில்லை. குழந்தைக்கு நஞ்சுக் கொடி வழியாக செல்லும் உணவை அவர்கள் சுவைக்கிறார்கள்.

4 சிறுநீர்

 

இது உங்களுக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் தாயின் வயிற்றில் தான் சிறுநீர் கழிக்கிறார்கள். இதை விட மோசமான ஒன்று என்னவென்றால், குழந்தைகள் சில நேரத்தில் அவற்றை குடிக்கவும் செய்கிறார்கள்.

5 அழுதல்

பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்தே அழ துவங்கி விடுவார்கள் என்பது நடைமுறையான ஒன்று. ஆனால் குழந்தைகள் கருவில் இருக்கும் போதிலிருந்தே அழ துவங்கி விடுகிறார்கள். ஆனால் அவை நமக்கு கேட்பதில்லை. அதை கேட்பதற்கு எந்த வழியும் இல்லை.

6 கேட்பது

குழந்தைகளின் காதுகள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றாலும், அவர்களால் கருவில் இருக்கும் போது, சுற்றி இருப்பவர்கள் பேசுவதை முழுமையாக கேட்க முடியும். உங்கள் குழந்தையால் இருதய துடிப்பை கேட்க முடியும். நீங்கள் நடப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை உணரவும் கேட்கவும் செய்கிறார்கள்.

7 பார்ப்பது

குழந்தைகளால் கருப்பையில் கண்களை திறக்கவும், வெளியில் இருக்கும் வெளிச்சத்தை உணரவும் முடியும். குழந்தைகள் 26 முதல் 28 வாரங்களில் குழந்தைகள் முதல் முறையாக கண்களை திறக்கிறார்.கருவறையில் அவர்களால் சரியாக பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் சூரியனின் கதிர்விச்சுகள் மற்றும் அவர்களை சுற்றி இருக்கும் பிரகாசமான ஒளியை அவர்களால் காண முடியும்.

8 கழிவுகள்

குழந்தைகள் பிறக்கும் வரை கழிவுகளை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முதல் கழிவு தோல், முடி, பித்தநீர், புரதங்கள், WBC ஆகியவற்றை கொண்டதாகும்.

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: