குழந்தை வளர்ப்பில் தந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..

காலம்காலமாக அப்பா என்பவர் சம்பாரிப்பவராகவும் அம்மா மட்டுமே குடும்பத்தை பராமரிப்பவர் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இது வேகமாக மாறிவருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்வதும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு உதவுவதும் அதிகரித்து வருகிறது. இது அதிகரித்தாலும் முழுதாய் மாற இன்னும் பல காலம் ஆகலாம். பெண்களுக்கு எப்படியெல்லாம் ஆண்கள் ஆதரவாய் இருக்க வேண்டுமென இங்கே குறிப்பிட்டுள்ளோம்.   

1 அப்பாக்கள் முதலில் கருத்தில் கொள்ளவேண்டியது

குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள பெண்களின் முக்கியத்துவத்தை. பெண்கள் கருவை ஒன்பது மாதம் சுமந்து பெற்றுகொடுக்கும்போது ஆண்கள் அவர்களை வளர்க்க தயாராய் இருக்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்ப்பதில் அவர்களும் பங்கெடுக்க வேண்டும்.

2 தர்மசங்கட படக்கூடாது

குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளுவதற்கு தயங்கக்கூடாது. சில டயப்பர், பாட்டிலில் தண்ணீர் மற்றும் பால் எடுத்துக்கொண்டு, இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு, அவர்களை மாலை நேரங்களில் வெளியே தூக்கிச்சென்று கொஞ்சுவது குழந்தை மீதான உங்கள் அன்பை அதிகமாக்கும். உங்களையும் புத்துணர்ச்சியாய் உணரச்செய்யும்.

3 குழந்தையை இருக்கும் அறையை விட்டு வேறு அறையில் படுத்து தூங்கவேண்டாம்

குழந்தை உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என கூறி வேறு அறையில் தூங்கக்கூடாது. உங்கள் மனைவிக்கும் அதே நிலைதான். நீங்கள் என்னதான் வேலை பளுவை சந்தித்து கொண்டிருந்தாலும், உங்கள் குழந்தை இரவில் அழும் போது சமாதான படுத்த உங்கள் துணைக்கு கொஞ்சம் உதவுங்கள். ஆரம்ப சில மாதங்களில், குழந்தை உணவுக்காக எழுந்திருக்கலாம்.

4 குழந்தைகளின் கழிவுகளை சுத்தம் செய்ய முகம் சுளிக்க கூடாது

குழந்தைகளின் கழிவுகளை சுத்தம் செய்வது கடினமான ஒன்று அல்ல. அம்மாக்கள் பொதுவாக குழந்தைகளை கவனித்து கொள்வதிலியே அதிக நேரத்தை செலவுகிறார்கள். அவர்களுக்கென தனிப்பட்ட நேரமே கிடைப்பது இல்லை. அவர்களுடன் வேலைகளை பங்கீட்டு கொள்வது அவர்களின் சுமையை குறைக்கும்.

5 தாலாட்டு பாடுதல்

குழந்தைகளுக்கு பாட மற்றும் வாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியாமானது. குழந்தைகள் பாடுவதற்கும், விளையாடுவதற்கும் தேவையான பொருட்களை வாங்கித்தருவது அவசியம். இது குழந்தைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சிறந்த பொழுதுபோக்காக அமையும். இரவு நேரத்தில் உங்கள் குழந்தையோடு செலவிடும் நேரம் அம்மாக்கள் அவர்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள உதவும்.

6 வலிமை படுத்துதல்

குழந்தைகள் மனவலிமையோடு செயல்படுவதற்கு அப்பாக்கள் உதவ வேண்டும். அவர்களது பிரச்சினைகளை உறுதியோடு எதிர்கொள்ள நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். செஸ் போன்ற விளையாட்டுக்கள் சவாலான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிக்க கற்றுத்தரும். அதேசமயம் அவர்களின் ஆரோக்கிய வாழ்விலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

7 வீட்டுப்பாடங்களில் உதவுதல்

வீட்டுப்பாடங்களில் உதவுவது என்பது அம்மாக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது என்று ஒதுக்காமல் அப்பாக்களும் அதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சில கடினமான பாடங்களில் அப்பாக்களின் உதவி மிகவும் அவசியமாகும்.

8 பணத்தின் மதிப்பை உணரச்செய்தல்

பணம் பற்றி உங்கள் குழந்தை அறிய வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான படிநிலை இதுதான். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை போல், உங்கள் குழந்தையின் சிறு சேமிப்பும், பெரிதாக வளரும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலையும் பாராட்டும் விதமாக கணிசமான தொகைகளை கொடுங்கள். அவர்களின் சேமிப்புகளை பன்றி, குபேரர் போன்ற உருவம் கொண்ட உண்டியல்களில் வைப்பதற்கு உதவுங்கள். கணிசமான தொகை சேரும் போது, அவர்களது விருப்படி ஒரு பொருளை வாங்கலாம். இந்த நடவடிக்கை குழந்தைகள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க கற்றுக்கொடுக்கிறது.

9 விடுமுறை நாட்கள்

உங்களது வேலை நாட்களை உங்கள் குடும்பத்துடன் கட்டாயம் செலவிட முடியாது. ஆனால் உங்கள் விடுமுறை நாட்களை முடிந்தவரை உங்கள் குடும்பத்திற்காக ஒதுக்குங்கள். இது உங்கள் குடும்பத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும். விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு செல்வது, அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு செல்வது என அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். வீட்டில் இருந்தால், அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு சமைத்து சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.

10 குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்

அம்மாக்களே பெரும்பாலும் அதிக நேரத்தை குழந்தையுடன் செலவிடுவார்கள். எனவே அவர்களுக்கு குழந்தை பற்றிய அனைத்து விஷயங்களும் தெரியும். நீங்களும் அப்படி இருக்க விரும்புவீர்கள் என்றால் அது உங்கள் நேரத்தை குழந்தையுடன் செலவிட்டால் மட்டுமே சாத்தியம். உணர்ச்சிபூர்வமான நெருக்கங்கள் அதிகரிக்க இந்த நேரங்களே உதவும். இது போன்ற நேரங்களில் அலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றிலிருந்து விலகி இருங்கள்.

Leave a Reply

%d bloggers like this: