தாயான பின் பணியாற்றும் போது குற்ற உணர்வு ஏற்படாததற்கான 6 காரணங்கள்

குழந்தை பிறந்தவுடன் சில மாதங்களில் உங்கள் உலகமே மாறியிருக்கும். தூக்கமில்லா இரவுகள், பாலூட்டுதல் என தொடர்ச்சியாக களைப்பாக இருப்பீர்கள். இவையெல்லாம் ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும் வரும் நாட்களில் சமாளிக்க கற்றுக்கொள்வீர்கள். தினமும் அவரகள் முகத்தில் விழிப்பது அவர்களுடன் விளையாடுவது அவர்களுடனே தூங்குவது என அவரகளுடனேயே முழு நேரத்தையும் செலவலிப்பீர்கள்.

இப்பொழுது உங்கள் ஒரே கவலை நீங்கள் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டால் அவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான். எனவே நீங்கள் மீண்டும் வேலைக்கு போக பெரிதும் யோசிப்பீர்கள். வேலையே விட்டு விடலாமா? என்று கூட யோசிப்பீர்கள். ஆனால் அது தேவையில்லாத கவலையாகும். இப்பொது உங்களை ஒரு வெற்றிகரமான இளம் தாயக மாற்ற பல வழிகள் உள்ளன. வேளைக்கு போகும் தாயாக இருப்பது சிரமம்தான். ஆனால் அதை நினைத்து நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. உங்கள் குற்ற உணர்வை போக்கும் 6 காரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

1 புதியவர்களின் அறிமுகம்

இதன் முக்கியமான அம்சம் உங்கள் குழந்தை மற்றவர்களுடன் நன்கு பழக கற்றுக்கொள்வார்கள். அவர்கள் பகல் நேரம் முழுவதையும் மற்ற குழந்தைகளுடனும் மற்றும் பிற பெரியவர்களுடன் செலவிடும்போது, அவர்கள் நிறைய கற்றுக்கொள்வர்கள். இப்படி பலதரப்பட்ட மக்களுடன் உரையாடுவது, உங்கள் குழந்தையிடம் அதிக நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.

2 ஏக்கத்தை குறைத்தல்

பகல் நேரம் முழுவதும் உங்கள் குழந்தைகள் உங்களை விட்டு பிரிந்து இருக்கும்போது, அவர்கள் அதிக சுதந்திரமாக வளருவார்கள். இது அவர்களின் பள்ளிக்கூடத்தை பற்றிய மற்றும் உறவினர்கள் பற்றிய பயத்தை நீக்கும். புது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராய் இருப்பார்கள். இது உங்களின் பெற்றோர் என்ற கடமையை சுலபமாக்கும்.

3 அட்டவணை போடுதல்

உணவு உண்ணுதல், படித்தல், விளையாடுதல் போன்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். இந்த கால அட்டவணை அவர்களை நாள்முழுவதும் பிஸியாகவே வைத்திருக்கும். குழந்தைகளின் இந்த பழக்கம் மனவளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாகும்.

4 புத்திசாலியாக

ஒரு நல்ல காப்பாளர் மூலமாகவும், நல்ல பராமரிப்பு மையம் மூலமாகவும் உங்கள் குழந்தை நல்ல புத்திசாலியாக வளருவார்கள். புத்திசாலியாக வளருவதோடு மனஉறுதியும் அதிகரிக்கும். இது வருங்காலத்தில் அவர்கள் படிப்பில் நிறைய சாதிக்க அடித்தளமாயிருக்கும்.

5 நட்பு வட்டாரங்கள்

உங்கள் குழந்தையின் நட்பு வட்டாரம் இங்குதான் தொடங்குகிறது. அவர்கள் வயதுள்ள குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிப்பார்கள். அவர்கள் சமூகத்துடன் எப்படி பழகவேண்டுமென்ற அடிப்படை பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள். வார்த்தைகள் மற்றும் பகிர்வுகளை தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள், குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் சமூகப் பழக்கவழக்கங்களை தங்கள் வயதில் கொண்டுவருவதில் மிகவும் கடினமான ஒன்றாகும்.

6 நிம்மதி அடைதல்

உங்கள் குழந்தை நல்லவர்களின் கைகளில் இருக்கிறார்கள் என்று உணரும்போது நீங்கள் மிகவும் நிம்மதியாக உணருவீர்கள். இது உங்கள் கவலையை குறைப்பதோடு நீங்கள் வீட்டுக்கு வரும்போது அவர்களுடன் புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடலாம்.

ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் நல்வாழ்வைப் பற்றி யோசிப்பதை நிறுத்துவது மிகவும் கடினம். உங்கள் குழந்தை வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடக்கத்தை உறுதிப்படுத்த, இவை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும். எனவே நீங்கள் மன அழுத்தம் இல்லாத பெற்றோராக விளங்க முடியும்.

Leave a Reply

%d bloggers like this: