பிரசவத்தை பற்றிய பொதுவான வதந்திகள்!

கர்ப்பகாலத்தில் நீங்கள் அதிக அளவில் குழந்தை பிறப்பு பற்றிய கதைகளையும், அனுபவங்களையும் கேட்டிருப்பீர்கள். அதில் சில உங்களை பயப்பட செய்ய கூடியதாகவும், சில பிரசவத்தை பற்றிய உங்கள் கோணத்தை மாற்றி அமைத்திருக்கும். ஆனால் நீங்கள் உணர வேண்டியது என்னவென்றால், உங்கள் பிரசவம் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவத்தை கொடுக்க போகிறது என்பதைத்தான். உங்களை பெற்றெடுக்கும் போது, உங்கள் அம்மாவின் உணர்ச்சியை மற்றும் அனுபவத்தை போல் உங்களுக்கு இருக்காது.

பொதுவாக கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு குங்குமப்பூ கொடுப்பார்கள். இது குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் என பரவலாக பேசப்படும். இதனால் சிறிது சிறிதாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலில் கலந்து கொடுப்பார்கள். உண்மையில், குங்குமப்பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் என பல உடல் ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால் இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல. இங்கு பிரசவத்தை பற்றி பொதுவாக பேசப்படும் வதந்திகளை பார்க்கலாம்.

1 உடலுறவு நிலைகள் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும்

சிலர் ஆண் குழந்தையை வைத்திருப்பது தொல்லையாக கருதுகிறார்கள். சிலரோ ஆண் குழந்தை தான் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஆண் குழந்தையை உருவாக்க வினோதமான யோசனைகளை ஏதும் இல்லை என்பது தான். சில ஆன்மீக வாதிகள் கொடுக்கும் மருந்துகளுடன், நீங்கள் சில உடலுறவு நிலைகளை முயற்சித்தால், கட்டாயம் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பப்படுகிறது. இது முட்டாள் தனமான ஒன்று. இது மரபணுக்கள் சார்ந்த ஒன்று. இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

2 பிரசவ வலியை ஏற்படுத்தும் தந்திரங்கள்

இயற்கையாக பிரசவவலியை தூண்டுவதற்கு பல தந்திரங்கள் இருக்கின்றன. உடலுறவு, நடந்து கொடுத்தால், சூடான மற்றும் காரமான உணவை உண்ணுதல், மன வலிமையை கொண்டு தூண்டுதல் மற்றும் குத்தூசி மருத்துவம், மார்பகக்காம்பு தூண்டுதல் மற்றும் இறுதியாக ஆமணக்கு எண்ணெய் குடித்தால் போன்றவற்றை செய்கிறார்கள்.

ஆமணக்கு எண்ணெய் குடிப்பது உங்கள் உடலில் நீர்ச்சத்தை மட்டும் குறைக்காது. இது குமட்டல் மற்றும் வயிற்று போக்கையும் ஏற்படுத்தும். மனம் வலிமையை கொண்டு தூண்டுதல் மற்றும் குத்தூசி மருத்துவம் உங்களுக்கு ஆறுதலையும், பிரசவ காலத்தில் குறைவான வலியை உணரவும் உதவுகிறது. ஆனால் ஆமணக்கு எண்ணெய் குடித்து உங்களை நீங்கள் ஏன் வருத்தி கொள்கிறீர்கள்.

3 இருவருக்கும் சேர்த்து சாப்பிடுதல்

இது எல்லோரும் நம்பக்கூடிய மிகப் பெரிய வதந்தி. எப்படி இருந்தாலும், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்கிறீர்கள். எனவே உங்கள் கர்ப்பகாலத்தில் நீங்கள் எப்போதும் சாப்பிடும் உணவில் அளவை விட 200 கலோரிகள் அதிகமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்து கொண்டாலே போதும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நொறுக்கு தீனிகளை எடுத்து கொண்டால், குமட்டல் உணர்வை தவிர்க்கலாம்.

4 தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படங்களில் நடப்பது போல் இருக்கும்

தொலைக்காட்சி தொடரில் காண்பிக்கப்படுபவை அனைத்தும் உண்மையல்ல. அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. இவற்றை காண்பது போல பிரசவ காலம் அவ்வளவு மோசமானதல்ல. ஆனால், உண்மையில் பிரசவத்தில் சில பெண்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், அது போன்று அனைவருக்கும் இருப்பதில்லை.

5 குழந்தை பிரசவிக்கும் போது, முதுகு புறமாக படுத்திருக்க வேண்டும்

இது உண்மையல்ல. நீங்கள் உங்களுக்கு வசதியான நிலையில் படுத்து கொள்ளலாம். யாரும் உங்களை இந்த நிலையில் தான் படுக்க வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டார்கள். நீங்கள் குழந்தையை பிரசவிக்கும் போது, கொஞ்சம் மேலாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

6 முகம் பிரகாசமாக இருந்தால் ஆண் குழந்தை

முகத்தின் பிரகாசத்தை வைத்து குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க முடியும் என்பது அறிவியல் ரீதியாக எந்த நிரூபணமும் இல்லாத ஒன்று. உங்கள் முகம் பிரகாசமாக இருந்தால், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் நன்கு கவனம் எடுத்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

7 இடுப்பின் வடிவம்

இது மிகவும் வேடிக்கையான வதந்தி. இதை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் பிரசவம் முடிந்தாலும் உங்கள் இடுப்பின் வடிவம் மாறாது. 

Leave a Reply

%d bloggers like this: