பெண்களே! நீங்கள் உபயோகிக்கும் குங்குமம் பாதுகாப்பானது தானா..?

நம் நாட்டில், இல்லை நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் போலி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களும், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த பொருட்களில் நஞ்சைக் கலந்து தயாரிக்கும் நிறுவனங்களும் அதிகமாகி வருகின்றன. இதில் கூட கலப்படம் நிகழுமா என்று புருவம் உயர்த்தி ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு கலப்படங்கள் நிகழ்கின்றன. இந்த கலப்பட வகைகளில், பெண்கள் மற்றும் சில ஆண்கள் பயன்படுத்தும் குங்குமமும் இடம் பெற்றுவிட்டது. பெண்களே! நீங்கள் அணியும் குங்குமம் பாதுகாப்பானதா என்பது பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்.

தற்கால ஆய்வில் பெண்கள் அணியும் குங்குமம் பாதுகாப்பற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த குங்கும பொடியை நல்ல சிவப்பு நிறத்திற்கு கொண்டுவர, லெட் டெட்ரோக்ஸிடே என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

இது தொடர்பான பரிசோதனையை டெல்லி, நியூ ஜெர்ஸி, மும்பை போன்ற நகரங்களில் நடத்தினர்; அந்த பரிசோதனையில் 118 வகையான குங்கும மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 80% குங்கும பொடிகளில் லெட் டெட்ரோஸிடே கலந்துள்ளது எனவும், 33% குங்கும பொடிகளில் அளவுக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கலக்கப்பட்டுள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் குங்கும பொடிகளில் 43% தயாரிப்புகள், லெட்டினை கலப்படம் செய்தே தயாரிக்கப்படுகின்றன. இது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்.

இந்த கலப்படம் நிகழ்வதால் என்ன நிகழும் என்று தெரியுமா?

இது போல் குங்கும பொடிகளில் லேட் டெட்ரோக்ஸிடே கலக்குவதால், இது தோல், கண்கள், மூச்சு தொடர்பான உறுப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும். இது உடல் திரவங்களோடு கலந்து உடலுக்குள் செல்ல நேர்ந்தால், இரத்த மண்டலம், சிறுநீரகம், திசுத்தொகுப்பு, நரம்பு மண்டலம் என அனைத்தையும் பாதிக்கும் அபாயம் உண்டு.

ஆகையால், பெண்களே! எதையும் நம்பி வாங்கவோ உபயோகப்படுத்தவோ வேண்டாம். சிந்தித்து செயலாற்றுவோம்..!

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: